புது டில்லி: தொழில்துறை இயந்திர உற்பத்தி, ஆட்டோமொபைல் பராமரிப்புமற்றும் கப்பல் உள்ளிட்ட 14 சிறப்புத் துறைகளில் இருந்து திறன் பெற்ற இந்திய பணியாளர்களைஜப்பானுக்கு அனுப்பும் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
![]()
|
இது குறித்து மத்திய அரசு கூறியுள்ளதாவது: இந்தியா ஜப்பான்இடையே திறன் பெற்ற பணியாளர்களை அனுப்புவதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் ஒரு வழிமுறை உருவாக்கப்படும். குறிப்பிட்ட 14 துறைகளில் பணியாற்றுவதற்கு தேவையான திறமை மற்றும் ஜப்பானிய மொழி சோதனைக்கு தகுதி பெற்ற பணியாளர்கள் அனுப்பப்படுவார்கள். இந்திய பணியாளர்களுக்கு ஜப்பானால் 'குறிப்பிட்ட திறன் பணியாளர்கள்' என்ற பெயரில் புது விசா வழங்கப்படும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இதனை நடைமுறைப்படுத்த கூட்டு செயற்குழு அமைக்கப்படும். இந்த ஒப்பந்தம் திறமையான தொழில் வல்லுநர்களை இந்தியாவிலிருந்து ஜப்பானுக்காக ஊக்கப்படுத்தும். என கூறியுள்ளனர்.
முன்னதாக 2017-ல் ஜப்பான் தொழில்துறைக்காக இந்தியாவும், ஜப்பானும் இணைந்து தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தை நடத்தின. தற்போது அமைச்சரவை ஒப்புதல் மூலம் நர்சிங், மின்சாரம், மின்னணு தகவல் தொடர்பு தொழில், கப்பல் கட்டுதல், வாகன பராமரிப்பு, விமான போக்குவரத்து, வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட 14 துறைகளுக்கு திறன் பெற்ற பணியாளர்களை அனுப்ப முடியும்.
![]()
|
இந்த திட்டம் நட்பு நாடுகளில் நிலவும் திறன் வாய்ந்த பணியாளர்களின் பற்றாக்குறையை போக்குவதோடு, இந்தியாவுக்கு பணம் அனுப்பப்படுவது அதிகரிக்கும். வெளிநாடுகளிலிருந்து பணம் பெறும் நாடுகளில் இந்தியா உலகளவில் முதல் இடத்தில் உள்ளது. கொரோனா சூழல் காரணமாக 2020-ல் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட தொகை 9% குறைந்தது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement