மதமாற்ற தடை சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Added : ஜன 06, 2021
Share
Advertisement
புதுடில்லி:உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள, கட்டாய மதமாற்ற தடை சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இச்சட்டம் தொடர்பாக, இரு மாநில அரசுகளுக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு நடக்கிறது. இங்கு, திருமணம் செய்வதற்காக, பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம்

புதுடில்லி:உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள, கட்டாய மதமாற்ற தடை சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இச்சட்டம் தொடர்பாக, இரு மாநில அரசுகளுக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு நடக்கிறது. இங்கு, திருமணம் செய்வதற்காக, பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுக்கும் வகையில், சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தால், இந்த சட்டத்தின்படி, 10 ஆண்டு சிறை, 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.

உத்தரகண்ட் மாநிலத்தை ஆளும், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான பா.ஜ., அரசும், கட்டாயப்படுத்தியோ அல்லது ஏமாற்றியோ மதமாற்றம் செய்பவர்களுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், வழக்கறிஞர் விஷால் தாக்கரே உட்பட சிலரும், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும், உச்ச நீதிமன்றத்தில், தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தன. அப்போது, தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் கூறியதாவது:பல்வேறு மாநிலங்களில், இதுபோன்று சட்டம் இயற்றப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தால், மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

திருமணம் நடந்து கொண்டிருக்கும் போதே, மணமக்கள் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். அரசியல் சட்டப்படி இந்த சட்டம் செல்லுமா என்பதை விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:மாநிலங்களின் கருத்தை கேட்காமல், சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது. இந்த சட்டம் தொடர்பாக விளக்கம் கேட்டு, உ.பி., மற்றும் உத்தரகண்ட் அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். இந்த சட்டம், அரசியல் சாசனப்படி செல்லுபடியாகுமா என்பதை, உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X