பிரணாப் முகர்ஜி புத்தகத்தில் மோடி - மன்மோகன் ஒப்பீடு

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி: ‛பிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாக சம்பாதித்து, அதை சாதித்துக் காட்டியவர் நரேந்திர மோடி' என, மறைந்த முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான, பிரணாப் முகர்ஜி, ‛தி பிரெசிடென்ஷியல் இயர்ஸ், 2012 - 17' என்ற தலைப்பில், தன் பதவிக்காலம் குறித்த அனுபவத்தை புத்தகமாக எழுதினார். அவர்
பிரணாப் முகர்ஜி, புத்தகம், மோடி, மன்மோகன், நரேந்திர மோடி, ஒப்பீடு

புதுடில்லி: ‛பிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாக சம்பாதித்து, அதை சாதித்துக் காட்டியவர் நரேந்திர மோடி' என, மறைந்த முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான, பிரணாப் முகர்ஜி, ‛தி பிரெசிடென்ஷியல் இயர்ஸ், 2012 - 17' என்ற தலைப்பில், தன் பதவிக்காலம் குறித்த அனுபவத்தை புத்தகமாக எழுதினார். அவர் கடந்த ஆண்டு மறைந்த நிலையில், அப்புத்தகம், நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. அதில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து, பிரணாப் முகர்ஜி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.


அதன் விபரம்:

கடந்த, 2014 லோக்சபா தேர்தல் முடிவுகள், இரண்டு காரணங்களுக்காக, வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. முதலாவது, 30 ஆண்டுகளுக்குப் பின், தேர்தலில் தீர்க்கமான முடிவினை மக்கள் வழங்கினர்.இரண்டாவது, முதல்முறையாக, லோக்சபாவில் தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக, பா.ஜ., வெற்றி பெற்றது. அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும் என, மக்கள் விரும்பியதன் பிரதிபலிப்பாகவே இந்த வெற்றியை பார்க்கிறேன்.
மேலும், சுய லாபத்திற்காக, அரசியல் கட்சிகள் கூட்டணியை மாற்றிக் கொள்வதை கண்டு, மக்கள் விரக்தி அடைந்ததும், பா.ஜ.,வின் வெற்றிக்கு காரணம்.

ஐ.மு., கூட்டணி வெற்றி பெற்றபோது, பிரதமராக பொறுப்பேற்க சோனியா மறுத்ததை அடுத்து, அந்த பதவி, சோனியாவால் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டது. ஆனால், நரேந்திர மோடி பிரதமரானது அப்படியல்ல. பா.ஜ., தேர்தல் பிரசாரத்தை துவக்குவதற்கு முன்பே, அவர் தான் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது.அதற்கு மக்களும் ஏகோபித்த ஆதரவை அளித்தனர். பிரதமர் பதவிக்கான தகுதியை, சுயமாக சம்பாதித்து, அதை சாதித்துக் காட்டியவர் நரேந்திர மோடி.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SRINIVASAN E - Chennai,இந்தியா
11-ஜன-202107:28:58 IST Report Abuse
SRINIVASAN E பள்ளி கல்லூரியில் இடைவெளி விட்டு காற்றோட்டமாக உட்கார வைக்க முடியும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு திறக்கலாம்
Rate this:
Cancel
raja - Kanchipuram,இந்தியா
07-ஜன-202116:41:43 IST Report Abuse
raja பாரத் ரத்னா பார்ஸல் செய்தாகிவிட்டது
Rate this:
Santhosh Kumar - Chennai,இந்தியா
07-ஜன-202118:00:51 IST Report Abuse
Santhosh Kumarஇல்லேன்னா உங்களுக்கு கொடுக்க சொல்லலாமா? இல்லை கொள்ளைக்காரன் நடராஜரின் சொந்த இடத்திற்கு கொடுக்கக் சொல்லலாமா?...
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்பின்னே வாயில்லா அப்பிராணிகளுக்கெல்லாம் பாரத் ரத்னா தர முடியுமா என்ன....
Rate this:
Cancel
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜன-202116:34:51 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  சாரி மக்களே.. எனது இந்த கருத்து இந்த பகுதிக்கு சம்பந்தம் இல்லாதது ஆனால் மக்கள் நலன் சம்பந்தப்பட்டது.. மக்களே நீங்க தியேட்டருக்கு போகாதீங்க.. சொந்த காசுல சூனியம் வச்சுக்காதீங்க.. வெளியிலோ பேருந்திலோ காற்றோட்டம் மிக்க பகுதியில் அருகருகில் உக்கார்ந்தால் நோய் பரவல் குறைவாக இருக்கும்.. அதுவே தியேட்டரில் அருகில் இரண்டரை மணி நேரம் நோய் தொற்று உள்ள நபர் அருகில் அமர்ந்தால் கொரோனா நிச்சயம்.. அவனுவ சுய லாபத்துக்காக மக்கள் உசுரோடு விளையாடுகிறார்கள்.. நீங்க தியேட்டருக்கு போய்ட்டு வீட்டுக்குள்ளாற வந்தா வீட்டில் உள்ள வயதான முதியோருக்கு பேராபத்து.. இளம் வயசுக்கு கொரோனா வந்தாலும் தப்பிச்சுக்குவீங்க.. ஆனால் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் நிலை ?? வேண்டாம் தியேட்டர் .. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை தியேட்டர் வேண்டவே வேண்டாம்.. அவர்கள் 100% என்ன 200% திறக்கட்டும்.. மக்கள் போகவேண்டாம்.. மறுபடியும் சொல்ரென்.. சொந்த காசுல சூனியம் வச்சுக்காதீக.. வச்சுக்காதீக..வச்சுக்காதீக..
Rate this:
Truth Triumph - Coimbatore,இந்தியா
07-ஜன-202122:00:17 IST Report Abuse
Truth Triumphநல்லது பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆறு மணி நேரம் அமர வேண்டும் தடுப்பூசி இல்லாமல் மாணவர்கள் போக கூடாது ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X