அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,'மாஜி'க்களுக்கு சிறை உறுதி: பிரசாரத்தில் பழனிசாமி ஆவேசம்

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (34+ 46)
Share
Advertisement
ஈரோடு : ''கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், ஊழல், முறைகேடில் சிக்கிய அமைச்சர்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் விரைவில் சிறை செல்வது உறுதி,'' என, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.ஈரோடு மாவட்டத்தில், இரண்டு நாள் பிரசார பயணத்தை நேற்று துவக்கிய முதல்வர் இ.பி.எஸ்., பவானி தொகுதி, அந்தியூர் சாலையில், வேனில் இருந்தபடி பேசியதாவது: அரசு
தி.மு.க., மாஜிக்கள், சிறை உறுதி, ஈரோடு, பிரசாரம், ஆவேசம், இ.பி.எஸ்.,

ஈரோடு : ''கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், ஊழல், முறைகேடில் சிக்கிய அமைச்சர்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் விரைவில் சிறை செல்வது உறுதி,'' என, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.

ஈரோடு மாவட்டத்தில், இரண்டு நாள் பிரசார பயணத்தை நேற்று துவக்கிய முதல்வர் இ.பி.எஸ்., பவானி தொகுதி, அந்தியூர் சாலையில், வேனில் இருந்தபடி பேசியதாவது: அரசு மற்றும் அ.தி.மு.க., பற்றி, ஸ்டாலின் குறை கூறி வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், மக்களை சந்திப்பதாக கூறி, கூட்டம் நடத்தினார். மனுக்களை பெற்றார். சட்டசபை தேர்தல் வருவதால், இப்போதும் மனுக்களை பெறுகிறார்.அம்மனுக்களை எங்களிடம் வழங்கினால், நடவடிக்கை எடுத்திருப்போம். மனுவை கிடப்பில் போட்டு, மக்களிடம் பொய் பேசி வருகிறார். டெண்டரே விடாத பணியில் ஊழல் நடந்ததாக, ஸ்டாலின் பேசுகிறார்.

அவர்களது ஆட்சியில் நிகழ்ந்த அமைச்சர்கள் மீதான ஊழல், முறைகேடு வழக்கை விரைந்து முடிக்க, நேற்று முன்தினம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மீது, நான்கு வழக்குகள், பொன்முடி மீது, மூன்று வழக்குகள், நேரு, துரைமுருகன், பன்னீர்செல்வம், தாமோதரன், அன்பரசு மீது தலா, இரு வழக்குகள், சுரேஷ்ராஜன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு மீது தலா ஒரு வழக்கு உள்ளது.

இவ்வழக்குகளில், இவர்கள் அனைவரும் விரைவில் சிறை சென்று, களி சாப்பிட உள்ளனர்.உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டாக வாய்தா வாங்கி வந்த நிலை மாறி விட்டதால், விரைவில் முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி.இந்த அரசில் எந்த டெண்டரிலும், யார் வேண்டுமானாலும், 'இ - டெண்டர்' முறையில் விண்ணப்பிக்கலாம். கடந்த, தி.மு.க., ஆட்சியில், யாருக்கு டெண்டர் வழங்க வேண்டுமோ, அவருக்கு மட்டும்தான் விண்ணப்பமே தருவர். கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், பேரன்கள் உதயநிதி, தயாநிதி, மகள் கனிமொழி என குடும்பமே ஊழல் செய்ததால், அவர்கள் பெயரில், 58 சொத்துகள் அதிகாரபூர்வமாக உள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, பவானியில், சிறு, குறு தொழில் முனைவோருடன், முதல்வர் கலந்துரையாடினார்.


ரத்த பாசமே இல்லை!



அந்தியூரில், முதல்வர் பேசியதாவது:அ.தி.மு.க., எங்கே ஊழல் செய்தது. எந்த இடத்திற்கு அழைத்தாலும், தி.மு.க.,வுடன் விவாதிக்க தயார். அ.தி.மு.க.,வை உடைப்பேன் என கூறும் ஸ்டாலின், முதலில், தி.மு.க.,வை காப்பாற்றட்டும். மதுரையில் இருந்து அவரது சகோதரர் புறப்பட்டு விட்டார். ஒரு வீட்டில், ஒரு தாய்க்கு பிறந்த சகோதரருக்குள் ரத்த பாசம் கொஞ்சம் கூட இல்லை. குடும்பத்தையே கவனிக்க முடியாத ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு என்ன செய்வார்? இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (34+ 46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
07-ஜன-202122:19:26 IST Report Abuse
K.n. Dhasarathan அப்போ பத்து வருடமா என்ன செய்திர்கள் ?ஊழல் செய்த தி மு க முன்னாள் அமைச்சர்களை கைது பண்ணவேண்டியதுதானே ? இப்போது திடீரென்று கூச்சல் போடுவது உங்கள் மீதுதான் சந்தேகம் வருகிறது.
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
07-ஜன-202121:27:14 IST Report Abuse
rajesh இந்த 10 வருஷ ஆட்சியில ஒன்னும் புடுங்கள நீங்க...... அப்பறம் தி மு க மாஜிகளுக்கு சிறை உறுதின்னு ஒரு வெத்து வெட்டு பேச்சு வேற
Rate this:
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
07-ஜன-202118:54:45 IST Report Abuse
sridhar இரண்டு கட்சிகளும் மாறி மாறி குறை கூறுவதில் ஒன்றும் அர்த்தமில்லை சொல்லாமல் செயலில் காண்பியுங்கள் பாராட்டப்படுவீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X