மதுரை: மதுரையில்இன்று இரவு பரவலாக மழை பெய்தது.
![]()
|
தமிழகத்தில் வரும் 12ம் தேதி வரையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. இதன் முன்னனோடியாக சென்னையில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் தொடர்ந்து 10 மணி நேரம் வரையில் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
![]()
|
இதனிடையே மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு 10 .15 மணியளவில் மழை பெய்ய துவங்கியது. மேலும் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. மதுரையில் அண்ணாநகர், ஆரப்பாளையும், விரகனூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
சென்னையின் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் ஆகிய பகுதிகளில்க சுமார் 2 மணிநேரமாக கனமழை பெய்தது. மேலும் சென்னையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த 4 மணிநேரத்திற்கு மழை பெய்யும் எனவும், கோவை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று இரவு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 201 மி.மீ மழை பதிவாகியது. கோவையில் 64 மி.மீ, புதுச்சேரியில் 56 மி.மீ, ஏற்காட்டில் 53 மி.மீ, பூந்தமல்லியில் 58.5 மி.மீ , லால்பேட்டையில் 56 மி.மீ மழை பதிவாகியது. மேலும் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் 41 மி.மீ மழையும், விமானநிலையத்தில் 43 மி.மீ மழையும் பதிவாகியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement