சென்னை:பொங்கல் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பை, நாளை, போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிக்க உள்ளார்.
பொங்கல் பண்டிகை, வரும், 14ம் தேதி, வியாழக் கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, அரசு சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு பஸ்கள், வரும், 12ம் தேதி முதல், 17ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய வெளி மாநிலங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இற்கான முன்பதிவு, கடந்த மாதமே துவங்கியது. இந்நிலையில், எத்தனை சிறப்பு பஸ்கள், சென்னையில் இருந்து இயக்கப்படும். மற்ற ஊர்களில் இருந்து, எத்தனை பஸ்கள் இயக்கப்படும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம், போக்குவரத்து துறை செயலர் முன்னிலையில் நடந்தது.
அதன் அடிப்படையில், பஸ்களின் இயக்கம், பயணியருக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாளை அறிவிக்க உள்ளதாக, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE