சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., வில்சனை கொன்றவர் கைது

Added : ஜன 06, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:கன்னியாகுமரியில், போலீஸ் எஸ்.ஐ., வில்சனை, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பயங்கரவாதி, கத்தார் நாட்டிலிருந்து, சென்னை வந்தபோது, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.கத்தார் நாட்டின் தலைநகர், தோகாவிலிருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' சிறப்பு விமானம், நேற்று அதிகாலை, 3:45 மணிக்கு, சென்னை வந்தது. அதில் வந்த பயணியரின், 'பாஸ்போர்ட்'களை, குடியுரிமைத் துறை அதிகாரிகள்

சென்னை:கன்னியாகுமரியில், போலீஸ் எஸ்.ஐ., வில்சனை, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பயங்கரவாதி, கத்தார் நாட்டிலிருந்து, சென்னை வந்தபோது, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கத்தார் நாட்டின் தலைநகர், தோகாவிலிருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' சிறப்பு விமானம், நேற்று அதிகாலை, 3:45 மணிக்கு, சென்னை வந்தது. அதில் வந்த பயணியரின், 'பாஸ்போர்ட்'களை, குடியுரிமைத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஷிகாபுதீன், 39, என்பவரின் பாஸ்போர்ட்டை ஆராய்ந்தபோது, அவர் தேடப்படும் குற்றவாளி என்பது தெரிய வந்தது.

திருவனந்தபுரம் போலீசார், ஒரு ஆண்டிற்கு முன், தேடப்படும் குற்றவாளியாக, அவரை அறிவித்ததும் தெரிய வந்தது. அவரிடம் தனியாக நடந்த விசாரணையில், கன்னியாகுமரியில், 2020 ஜனவரியில், எஸ்.ஐ., வில்சனை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர் என்பதும், தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ., அவரை தேடி வருவதும் தெரிய வந்தது. சென்னை விமான நிலையத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஷிகாபுதீனை கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
07-ஜன-202117:45:56 IST Report Abuse
RaajaRaja Cholan அவனை போட்டு தள்ளுங்க , வெறி பிடித்த மிருகம் , மிருகம் ஏன் மீண்டும் நாட்டுக்குள் வந்தது என்று மிருகத்தின் நசுக்கி விசாரிக்கவும் , பின்பு அவன் காவலரை தாக்கி தப்பிக்க முயறிச்சி செய்ததால் தற்காப்புக்கு சுட்டு இந்த உலகத்தை விட்டு விடவும் . முட்ட பயல் , மற்றவர்களை அவனை போல் முட்டாள் என்று நாட்டுக்குள் வந்துஇருக்கிறான்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஜன-202102:33:24 IST Report Abuse
தமிழவேல் ஒருமையில் எழுதலாமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X