சென்னை:கன்னியாகுமரியில், போலீஸ் எஸ்.ஐ., வில்சனை, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பயங்கரவாதி, கத்தார் நாட்டிலிருந்து, சென்னை வந்தபோது, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கத்தார் நாட்டின் தலைநகர், தோகாவிலிருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' சிறப்பு விமானம், நேற்று அதிகாலை, 3:45 மணிக்கு, சென்னை வந்தது. அதில் வந்த பயணியரின், 'பாஸ்போர்ட்'களை, குடியுரிமைத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஷிகாபுதீன், 39, என்பவரின் பாஸ்போர்ட்டை ஆராய்ந்தபோது, அவர் தேடப்படும் குற்றவாளி என்பது தெரிய வந்தது.
திருவனந்தபுரம் போலீசார், ஒரு ஆண்டிற்கு முன், தேடப்படும் குற்றவாளியாக, அவரை அறிவித்ததும் தெரிய வந்தது. அவரிடம் தனியாக நடந்த விசாரணையில், கன்னியாகுமரியில், 2020 ஜனவரியில், எஸ்.ஐ., வில்சனை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர் என்பதும், தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ., அவரை தேடி வருவதும் தெரிய வந்தது. சென்னை விமான நிலையத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஷிகாபுதீனை கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE