சென்னை:பரங்கிமலையில், திருடர்கள் கைவரிசை காட்டியது, ரியல் எஸ்டேட் நிறுவனம் இல்லை என, தெரியவந்துள்ளது.
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த சங்கீதா என்பவரின் வீட்டில், 2 சவரன் நகைகள் திருடிய, மடிப்பாக்கம் உள்ளகரத்தைச் சேர்ந்த சுருட்டை முருகன், 33, அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஆகாஷ், 21, ஆகியோரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.விசாரணையில் இருவரும், பல்லாவரம், மடிப்பாக்கம் என, 61 இடங்களில், ஒன்பது இரு சக்கர வாகனங்கள், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை திருடியது தெரிந்தது.
மேலும், ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி ஜாங்கிட் மகன், பரங்கிமலையில் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில், 35 ஆயிரம் ரூபாய் திருடியதாக கூறியிருந்தனர்.தொடர் விசாரணையில், அந்த நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனம் அல்ல; சிறிய அளவில் நடத்தப்படும், சிமென்ட் கலவை தயாரிப்புக்கான அலுவலகம் என தெரிய வந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE