சென்னை:ர்தல் ஏற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு உள்ளது. அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.வரும், 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மேலும், ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை, இரண்டாக பிரிக்கும் பணியும் நடந்து வருகிறது.
கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதால், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், கூடுதலாக எவ்வளவு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவை, கூடுதல் பணியாளர்கள் எவ்வளவு பேர் தேவை என்ற விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன.இவற்றின் நிலை குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், இன்று மாலை, 3:30 மணிக்கு, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே ஆலோசனை நடத்த உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE