பொது செய்தி

தமிழ்நாடு

811 பேருக்கு தொற்று 943 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : ஜன 06, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்றால் நேற்று, 811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்தோரில், 943 பேர் குணமடைந்து, வீடு திரும்பினர்.இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 242 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், 63 ஆயிரத்து, 582 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில், 228 பேர்; கோவையில், 87 பேர்; செங்கல்பட்டில், 47 பேர் உட்பட, மாநிலம்

சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்றால் நேற்று, 811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்தோரில், 943 பேர் குணமடைந்து, வீடு திரும்பினர்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 242 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், 63 ஆயிரத்து, 582 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில், 228 பேர்; கோவையில், 87 பேர்; செங்கல்பட்டில், 47 பேர் உட்பட, மாநிலம் முழுதும், 811 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 1.45 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், எட்டு லட்சத்து, 23 ஆயிரத்து, 181 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சிகிச்சையில் இருந்தவர்களில், 943 பேர் குணமடைந்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை, எட்டு லட்சத்து, 3,328 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, சென்னையில், 2,327 பேர்; கோவையில், 745 பேர் உட்பட, 7,665 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று, 11 பேர் உட்பட, 12 ஆயிரத்து, 188 பேர் இறந்துள்ளனர். பிரிட்டனில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என, 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், நான்கு பேருக்கு உருமாறிய தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X