தாமதமின்றி பள்ளியை திறக்க வேண்டும்: கருத்து கேட்பில் பெற்றோர் வலியுறுத்தல்

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 06, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை:பொங்கல் விடுமுறைக்கு பின் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நேற்று துவங்கியது. பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க வலியுறுத்தினர்.தமிழகத்தில் மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தாக்கத்தால் பள்ளிகளை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பிளஸ் 2 பொது தேர்வு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக
தாமதமின்றி பள்ளி, பெற்றோர், கருத்து கேட்பு,

சென்னை:பொங்கல் விடுமுறைக்கு பின் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நேற்று துவங்கியது. பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க வலியுறுத்தினர்.


தமிழகத்தில் மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தாக்கத்தால் பள்ளிகளை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பிளஸ் 2 பொது தேர்வு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.


வரும் 8ம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்தார்.நேற்று முதல் அனைத்து பள்ளிகளிலும் கருத்து கேட்பு கூட்டம் துவங்கியது. பொங்கல் விடுமுறைக்கு பின் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து கருத்துக்கள் பெறப்படுகின்றன.பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து கருத்துகளை பதிவு செய்தனர்.


பெரும்பாலான பெற்றோர் 'பள்ளிகளை தாமதமின்றி திறக்க வேண்டும். மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் அவர்களை மீண்டும் கல்வி கற்க துாண்டுவது சவாலானதாக இருக்கும்' என தெரிவித்துள்ளனர்.கருத்து கேட்பு பணிகளை இன்றைக்குள் முடித்து விட்டு நாளைக்குள் பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mahendran - trichy,இந்தியா
07-ஜன-202117:44:38 IST Report Abuse
mahendran During pandemic life is more important than this one year If there is normalcy why central government is opposing for 100% seat in theatres.Even public transport like train,bus are operating with loss as people are scared to come out to travel. Is it possible for children to sit with masks for continuously 8:hours Even adults will find it difficult.Please don't put pressure on government.
Rate this:
Cancel
07-ஜன-202117:14:45 IST Report Abuse
ஆப்பு போன முறை கருத்துக் கணிப்பில் பள்ளிகள் திறக்கக் கூடாதுன்னு சொன்னாங்க. வீட்டில் பிள்ளைங்க ரோதனை தாங்க முடியலை போலிருக்கு.
Rate this:
Cancel
Thesa bakthi ulla nunbun - chennai,இந்தியா
07-ஜன-202116:58:44 IST Report Abuse
Thesa bakthi ulla nunbun அரசு ஆசிரியர்கள் சம்பளம் என்பது % பிடித்தம் செய்து பரம ஏழை மக்களின் வாழ்க்கைக்கு பயன் படுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X