ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் முதல்வராக இருந்த மெஹபூபா முப்தி, அரசு இல்லத்திற்கு பொருட்கள் வாங்க ஆறு மாதங்களில், 86 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு - காஷ்மீரில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான மெஹபூபா முப்தி முதல்வராக இருந்தபோது, அரசு பணத்தை செலவிட்டது தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள், தற்போது வெளியாகி உள்ளன.இதன்படி, 2018 ஜன., முதல் ஜூன், வரையிலான ஆறு மாதங்களில், மெஹபூபா, தான் வசித்த அரசு இல்லத்திற்கான படுக்கை விரிப்பு, 'டிவி' உள்ளிட்டவற்றை, 86 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கியுள்ளார்.
பிப்.,மாதம், 11.62 லட்சம் மதிப்பில், படுக்கை விரிப்புகள் வாங்கியுள்ளார். மார்ச் மாதத்தில் மர சாமான்கள், தரைவிரிப்புகளுக்காக, 53 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்.
ஜூன், மாதம் மட்டும் 'டிவி' வாங்க, 22 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளார்.இதுமட்டுமின்றி, 2016 ஆக., முதல், 2018 ஜூலை, வரை, உணவு பொருட்கள் பரிமாற மற்றும் சாப்பிட பயன்படுத்தும் கரண்டி, ஸ்பூன், போர்க் உள்ளிட்டவற்றை மட்டும், 40 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இதன்படி, மெஹபூபா மொத்தமாக ஒரு கோடி ரூபாய்க்கும் மேல், தான் வசித்த முதல்வர் இல்லத்திற்காக செலவழித்துள்ளது, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE