சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருதூர் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை; கூடுதலாக 10 லட்சம் லிட்டர் வழங்க கோரிக்கை

Added : ஜன 07, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : 'குடியிருப்புகளின் எண்ணிக்கையும், மக்கள் தொகையும் அதிகரித்துள்ளதால், கூடுதலாக, 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும்' என்று, மருதுார் ஊராட்சி சார்பில், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மருதுார் ஊராட்சியில், 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அத்திக்கடவு குடிநீர் திட்டத்தில்

மேட்டுப்பாளையம் : 'குடியிருப்புகளின் எண்ணிக்கையும், மக்கள் தொகையும் அதிகரித்துள்ளதால், கூடுதலாக, 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும்' என்று, மருதுார் ஊராட்சி சார்பில், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மருதுார் ஊராட்சியில், 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அத்திக்கடவு குடிநீர் திட்டத்தில் இருந்து, இந்த ஊராட்சிக்கு தினமும், 5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த தண்ணீரை சுத்திகரித்து, நான்கு நாட்களுக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் அனைத்து கிராமங்களுக்கும் வினியோகிக்கின்றனர்.எனினும் குடிநீர் பற்றாக்குறை நீடிக்கிறது. சில குடியிருப்புகளில், எட்டு நாளைக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. கூடுதலாக குடிநீர் வழங்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகம் மாவட்ட கலெக்டருக்கும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊராட்சி தலைவர் பூர்ணிமா கூறியதாவது:அத்திக்கடவு குடிநீர் திட்டத்தில் இருந்து வழங்கப்படும் குடிநீர், போதுமானதாக இல்லை. போர்வெல்லில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகம் செய்கிறோம். 10 ஆண்டுக்கு முன், கவுண்டம்பாளையம், வடவள்ளி கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையம் செல்லப்பனுாரில் அமைக்கப்பட்டது. அப்போது இந்த ஊராட்சிக்கு தினமும், 3 லட்சம் லிட்டர் கொடுப்பதாக, அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இன்று வரை குடிநீர் வழங்கவில்லை.தற்போது அத்திக்கடவு மூன்றாவது திட்டத்திற்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

இதற்கென தண்டிபெருமாள்புரத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை, மருதுார் ஊராட்சி பகுதியில் விட்டால், 15 குட்டைகள் நிரம்பும். சுத்திகரிப்பு நிலையம் இந்த ஊராட்சியில் அமைக்கப் படுவதால், கூடுதலாக தினமும், 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X