பொது செய்தி

தமிழ்நாடு

புளியம்பட்டிக்கு வி.ஏ.ஓ., நியமிக்க வேண்டுகோள்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி புளியம்பட்டி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. கொ.ம.தே.க., மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி தாலுகா புளியம்பட்டியில், கிராம நிர்வாக அலுவலகம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி புளியம்பட்டி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

கொ.ம.தே.க., மாவட்ட செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி தாலுகா புளியம்பட்டியில், கிராம நிர்வாக அலுவலகம் தனியாக அமைத்து, புளியம்பட்டி, கோட்டாம்பட்டி, கிட்ட சூராம்பாளையம் கிராமத்துக்காக பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, இந்த அலுவலகம் டி.கோட்டாம்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படுகிறது. புளியம்பட்டி கிராமத்தில், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

விவசாயம் சார்ந்த இந்த கிராம மக்கள், அரசு நலத்திட்டம், வேளாண் துறை சார்ந்த பணிகளுக்கு கிராம நிர்வாக அலுவலரை மிகவும் சிரமப்பட்டு சந்திக்கும் நிலை உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் சான்றிதழ் பெறுவது தாமதமாகிறது. எனவே, புளியம்பட்டியில் கிராம நிர்வாக அலுவலகம் இருக்கும் நிலையில் இப்பகுதிக்கென தனியாக கிராம நிர்வாக அலுவலர் அல்லது வாரத்தில் மூன்று நாட்களாவது இக்கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணியாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X