சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவில் யானைகள் 'விசிட்' எஸ்டேட் தொழிலாளர்கள் பீதி

Added : ஜன 07, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறையில், ஒரே நேரத்தில் பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் முகாமிட்டு, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்தியதால், தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் காட்டுயானைகள் தனித்தனியாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணிக்கு தோணிமுடி எஸ்டேட் மூன்றாம் பிரிவில் முகாமிட்ட ஐந்து யானைகள், ஊராட்சி

வால்பாறை : வால்பாறையில், ஒரே நேரத்தில் பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் முகாமிட்டு, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்தியதால், தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் காட்டுயானைகள் தனித்தனியாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணிக்கு தோணிமுடி எஸ்டேட் மூன்றாம் பிரிவில் முகாமிட்ட ஐந்து யானைகள், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நுழைவுவாயிலை இடித்து சேதப்படுத்தியது.அதன் பின், அருள்ஜோதி என்ற தொழிலாளியின் வீட்டில் பயிரிடப்பட்ட வாழையை உட்கொண்டன. முருகன் என்பவரின் வீட்டுக்கு பின் பகுதியில், அரை மணி நேரத்திற்கு மேலாக யானைகள் முகாமிட்டதால், வீட்டில் இருந்தவர்கள் பீதியடைந்தனர்.

தகவல் அறிந்ததும், மானாம்பள்ளி வனச்சரக வனவர் மற்றும் வேட்டை தடுப்புக்காவலர்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி யானையை விரட்டினர். இதே போல், நடுமலை எஸ்டேட் பகுதிக்குள் நள்ளிரவு, 2:30 மணிக்கு நுழைந்த ஒற்றையானை இங்குள்ள மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையின் கதவை உடைத்து, அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை வெளியே இழுத்து உட்கொண்டு சேதப்படுத்தியது.மனித - வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர், வனவர் முனியாண்டி தலைமையில் யானையை அங்கிருந்து விரட்டினர். ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் யானைகள் தொடர்ந்து முகாமிட்டு, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்தி வருவதால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X