சூலுார் : ''நான்கு அமாவாசைகள் கழிந்தவுடன் அ.தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்,'' என, தி.மு.க., சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் கார்த்திகேய சிவ சேனாபதி பேசினார்.
தி.மு.க.,வின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாநில நிர்வாகி கார்த்திகேய சிவ சேனாதிபதி, சூலுார் தொகுதியில் உள்ள விவசாயிகள், விசைத்தறியாளர்கள், ஆடு வளர்ப்போர் ஆகியோரை சந்தித்து அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.நீலம்பூர் ஆச்சான்குளத்தில் விவசாயிகளிடம் கருத்து கேட்டபின் அவர் பேசியதாவது:பத்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியால், தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அமைச்சர்கள் ஊழலில் திளைக்கின்றனர். இன்னும் நான்கு அமாவாசைகள் கழிந்ததும், ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. அடுத்து அமையும் தி.மு.க., ஆட்சியில் மக்கள் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும். அதற்காக, துறை வாரியாக மக்களிடம் குறைகள் கேட்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE