பெங்களூரு: ''தோசை மற்றும் சட்னியில் விஷம் கலந்து, என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது,'' என, இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி தபன் மிஸ்ரா, குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக, அவர் கூறியதாவது:கடந்த, 1979ல் விக்ரம் நாராயண், 1994ல் நம்பியார், 1999ல் சீனிவாசன்
மர்மமாக இறந்ததை தொடர்ந்து, என்னையும் கொலை செய்ய முயற்சி நடந்தது. கடந்த, 2017 மே 23ல், இஸ்ரோ தலைமை அலுவலகத்தில், கூட்டம் நடந்த பின், தோசை, சட்னி வழங்கப்பட்டது. சட்னியில், 'ஆர்செனிக் டிரயாக்சைடு' என்ற விஷம் கலந்து இருந்தது.
அதிசயம்
![]()
|
அதை அறியாமல் சாப்பிட்ட நான், உயிர் பிழைத்ததே பெரிய அதிசயம் என, டாக்டர்கள் கூறினர். அதிலிருந்து மீள சரியாக, இரண்டு ஆண்டுகள் ஆகின. அதன் பிறகும், மூச்சுத்திணறல் பிரச்னை, சரும தொற்று போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன.கடந்த, 2017 ஜூலையில், என்னை சந்தித்த உள்துறை உயர் அதிகாரி, 'உங்களுக்கு விஷம் கொடுக்க வாய்ப்புள்ளது; கவனமாக இருங்கள்' என, எச்சரித்தார். அதுபோல, 2019ல் திடீரென, என் அலுவலகத்துக்கு வந்த அமெரிக்க மூத்த விஞ்ஞானி ஒருவர், 'உங்களுக்கு நடந்த கொலை முயற்சி குறித்து, வாய் திறக்கக்கூடாது. 'வாயை மூடிக்கொண்டிருந்தால், உங்கள் மகனுக்கு, அமெரிக்க பல்கலைக்கழகத்தில், உயர் பதவி வழங்குவோம்' என, ஆசை காண்பித்தார்.
அதை நான் மறுத்தேன். 'இ -- மெயில்' மூலமும், எனக்கு பல முறை மிரட்டல் வந்துள்ளது.
விசாரணை
சில மாதத்துக்கு முன், என் வீட்டு வளாகத்தில், பல முறை, விஷப் பாம்புகள் தென்பட்டன. அதிர்ஷ்டவசமாக என் வளர்ப்பு நாய்கள், பாதுகாப்பு ஊழியர்களின் உதவியால், உயிர் தப்பினேன். அதுகுறித்து ஆராய்ந்ததில், வீட்டின் சுற்றுச்சுவர் வெளிப்பகுதியிலிருந்து, உட்பகுதிக்கு பாம்புகளை அனுப்ப, சுரங்கம் தோண்டியது கண்டுபிடிக்கப்பட்டது. அதை மூடிய பின், பாம்புகள் வருவது குறைந்தது.என்னை கொலை செய்ய, முயற்சி நடந்தது தொடர்பாக, மத்திய அரசு உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE