கோவில்பாளையம் : கோவில்பாளையத்தில், 54 லட்சம் ரூபாய் செலவழித்து வாரச்சந்தை வளாகத்தில் கடைகள் கட்டப்பட்டும் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
கோவில்பாளையத்தில், ஒவ்வொரு வாரமும், புதன்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த வார சந்தையில் வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். வாரச்சந்தை பஸ் ஸ்டாண்டுக்கு மேற்கே காலி மைதானத்தில் செயல்படுகிறது.சந்தை திடலில் கடைகளுக்கு கூரையில்லை. கான்கிரீட் ரோடு இல்லை. குடிநீர், மின்விளக்கு வசதிகள் இல்லை. இதையடுத்து, ஒன்றரை ஆண்டுக்கு முன், 54 லட்சம் ரூபாய் செலவில் வாரச்சந்தை வளாகத்தில் கூரைகளுடன் கடைகள் கட்டப்பட்டன. கான்கிரீட் தளமும் அமைக்கப்பட்டது.
ஆனால் ஒன்றரை ஆண்டு முடிந்தும் இந்த கடைகள் பயன்படுத்தப்படுவதில்லை.சந்தை வியாபாரம் செய்யும் வியாபாரிகள் திறந்தவெளி மைதானத்தில்சாலை ஓரத்தில் அமர்ந்து விற்பனை செய்கின்றனர். பேரூராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 54 லட்சம் ரூபாய் செலவழித்தும் சந்தை வளாகம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE