பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் தொகுப்பு வழங்கல் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

Added : ஜன 07, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என, கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்பாக, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு மற்றும், 2,500 ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. வால்பாறை தாலுகாவில் உள்ள, 48 ரேஷன் கடைகளில், 17,214

வால்பாறை : வால்பாறையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என, கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்பாக, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு மற்றும், 2,500 ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. வால்பாறை தாலுகாவில் உள்ள, 48 ரேஷன் கடைகளில், 17,214 கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. கடந்த, 4ம் தேதி முதல் அனைத்து ரேஷன்கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.இந்நிலையில், கண்காணிப்பு அலுவலரும், கோவை நகர் புற நிலவரித்திட்ட உதவி ஆணையாளருமான பாலகிருஷ்ணன், ரேஷன் கார்டுதாரர்களுக்கு முறையாக பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறதா என்பதை, ஆய்வு செய்தார்.

அவருடன், தாசில்தார் ராஜா, வட்ட வழங்கல் அலுவலர் மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் பன்னீர்செல்வம், வி.ஏ.ஓ., விஜய்அமிர்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X