பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் இருந்து, நெகமம் வழியாக, கோவைக்கு கடந்த, 30 ஆண்டுகளாக இயக்கப்பட்ட இரண்டு அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால், சிறு வியாபாரிகள், கட்டட தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
பொள்ளாச்சியில் இருந்து நெகமம், கோப்பனுார்புதுார், வடசித்துார், செட்டிபாளையம் வழியாக, கோவை - காந்திபுரம் மற்றும் உக்கடத்துக்கு கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், இரண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.தினமும், காலை, 5.30 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து, நெகமம் வரும் அரசு பஸ்சில், சேலை வியாபாரிகள், கட்டட தொழிலாளர்கள், இனிப்பு காரம் உற்பத்தியாளர்கள் என, 50க்கும் மேற்பட்டோருடன், கோப்பனுார்புதுார், வடசித்துார் மற்றும் செட்டிபாளையம் வழியாக கோவை சென்றடையும்.
அதேபோல, இரவு, 8:00 மணிக்கு, உக்கடத்தில் இருந்து புறப்பட்டு, நெகமம் வந்தடையும் இந்த பஸ்சால், நுாற்றுக்கணக்கானோர் பலனடைந்தனர். கடந்த, ஒன்பது மாதங்களுக்கு முன் கொரோனா பரவல் அச்சத்தால் பஸ் நிறுத்தப்பட்டது.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், மீண்டும் இந்த பஸ் இயக்கப்பட்டு, ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்டது. இதனால், தொழிலாளர்கள், நெசவாளர்கள், வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இரண்டு பஸ்கள் மாறி செல்லும் சிரமம் மற்றும் கூடுதல் செலவை தவிர்க்க, நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE