மடத்துக்குளம் : மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டில், முக்கிய சாகுபடியாக நெல் பயிர் உள்ளது. நடப்பாண்டு ருத்ராபாளையம் ராமகுள பாசனத்தில், ஆயிரம் ஏக்கர் பரப்பில், சில மாதங்களுக்கு முன், நெல் நடவு செய்யப்பட்டன.
மூன்று மாதங்களை கடந்து, பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தன.இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், தை மாதம் அறுவடை தொடங்க, முன்னேற்பாடுகள் செய்து வந்தோம். இந்த பருவத்தில், மழையை எதிர்பார்க்கவில்லை. திடீர் மழையால், வளர்ந்த நெற்பயிர்கள் சாய்ந்து விட்டன.பல நுாறு ஏக்கருக்கு இந்த பாதிப்பு உள்ளது. மண்ணில் விழுந்ந நெல்மணிகள் முளைக்கத்தொடங்கி விட்டன. இந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாது. விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு நடவடிக்கை மேற்கொண்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE