சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலத்தில் வராத உதவி! பரிதவிக்க வைத்த திருமண உதவி திட்டம் ... இரண்டரை ஆண்டாக காத்திருக்கும் பரிதாபம்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
கோவில்பாளையம் : கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பித்து, இரண்டரை ஆண்டுகளாகியும், உதவித்தொகை கிடைக்காததால், 200 குடும்பங்கள் தவிக்கின்றனர். இதே நிலைதான், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது.தமிழக அரசின், சமூக நலத் துறை சார்பில், பெண்களுக்கு ஐந்து வகையான திருமண நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

கோவில்பாளையம் : கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பித்து, இரண்டரை ஆண்டுகளாகியும், உதவித்தொகை கிடைக்காததால், 200 குடும்பங்கள் தவிக்கின்றனர்.

இதே நிலைதான், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளது.தமிழக அரசின், சமூக நலத் துறை சார்பில், பெண்களுக்கு ஐந்து வகையான திருமண நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தில் திருமணத்துக்கு, 40 நாட்களுக்கு முன்பே சம்பந்தப் பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பிக்கவேண்டும். திருமண பத்திரிக்கை, திருமண பதிவுச் சான்று, ஆதார், போட்டோ, வருமானச்சான்று, சாதிச் சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து விண்ணப்பிப்பவர்களில் பிளஸ் 2 முடித்தவர் களுக்கு, 8 கிராம் தங்கமும், 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, 8 கிராம் தங்கமும், 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்தில் உள்ள கோவில்பாளையம், இடிகரை பேரூராட்சி மற்றும் ஏழு ஊராட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து இரண்டரை ஆண்டு ஆகிவிட்டது. இதுவரை உதவித்தொகை கிடைக்க வில்லை. கோவில்பாளையம் பகுதியில் விண்ணப்பித்தோர் கூறுகையில், '2018 ஜூன் மாதம் விண்ணப்பித்து, 2 ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும், கலெக்டர் அலுவலகத்திற்கும் நடையாய் நடக்கிறோம்.

இந்த தொகை வரும் என நம்பி வெளியில் வட்டிக்கு கடன் வாங்கி பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தோம். இப்போது இரண்டரை ஆண்டு ஆகிவிட்டது. கல்யாணம் ஆகி குழந்தையும் பிறந்து விட்டது. இன்னும் உதவித்தொகை கிடைக்கவில்லை. அரசு விரைவில் 8 கிராம் தங்கமும் ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் இதே நிலை இருப்பதாகவும், அலுவலர்கள் புலம்புகின்றனர். விரைந்து நிதி ஒதுக்கி, பயனாளிகளின் ஏக்கத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X