பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கோவனுாரில், கிராமப்புற பெண்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் மத்திய அரசின் தேசிய தொழிலாளர் கல்வி வளர்ச்சி வாரியம் இணைந்து, கிராமந்தோறும், விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றன.நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பெண்கள் பயன்பெறும் வகையில், இரண்டு நாள் முகாம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சரசு வரவேற்றார். இதில், மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
கோவை மாவட்ட முன்னோடி வங்கி, நிதிசார் கல்வி ஆலோசகர் இளஞ்செழியன், மகளிருக்காக அரசு வழங்கும் மானிய கடன்கள், சுய தொழில் தொடங்க கடன் பெறுவது எவ்வாறு, மற்றும் பணமற்ற பாதுகாப்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்வது குறித்து விளக்கினார். மத்திய அரசின் மக்கள் தொடர்பு அலுவலக உதவி இயக்குனர் ஹரினா தங்கமம், பெண்கள் முன்னேற்றத்துக்கான மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார். உதவி அலுவலர் சந்திரசேகரன் கொரோனா விழிப்புணர்வு குறித்து விளக்கினார்.
தேசிய தொழிலாளர் கல்வி வளர்ச்சி வாரிய கல்வி அதிகாரி பிரபாகரன், 'நாட்டின் வளர்ச்சியில் கிராம மக்களின் பங்கு' என்ற தலைப்பில் பேசினார். நாயக்கன்பாளையம் ஊராட்சி தலைவர் சாந்திப்பிரியா பேசினார். முகாமில், 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். சகாதேவன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE