சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கான்ட்ராக்டர் தற்கொலை மிரட்டல்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
தேனி:துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆய்வு கூட்டம் நடத்திய நிலையில், பணி செய்ததற்கான, 8 லட்சம் ரூபாய் வழங்காததால் தற்கொலை செய்வேன் என கான்ட்ராக்டர், தேனி ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் மிரட்டல் விடுத்தார். 'பேவர் பிளாக்'தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றியம், கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி துறை திட்டத்தில், கான்ட்ராக்டர் குபேந்திரன், 8 லட்சம்

தேனி:துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆய்வு கூட்டம் நடத்திய நிலையில், பணி செய்ததற்கான, 8 லட்சம் ரூபாய் வழங்காததால் தற்கொலை செய்வேன் என கான்ட்ராக்டர், தேனி ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் மிரட்டல் விடுத்தார்.


'பேவர் பிளாக்'

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றியம், கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி துறை திட்டத்தில், கான்ட்ராக்டர் குபேந்திரன், 8 லட்சம் ரூபாய் மதிப்பில், 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கும் பணி செய்தார்.பணி முடித்து ஏழு மாதங்களாகியும், அதற்கான தொகை வழங்கவில்லை. தொடர்ந்து அலைந்தும், பணம்கிடைக்கவில்லை.

நேற்று மதியம், 12:00 மணிக்கு, தேனி ஊரக வளர்ச்சி துறைக்கு சென்று, பணிக்கான தொகையை வழங்க கோரினார்.அப்போது அலுவலர்களுக்கும், அவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. 'பில் பாஸ் செய்து வழங்காவிட்டால், மாடியில் இருந்து குதிப்பேன்' என, சத்தம் போட்டார்.

தரை தளத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆய்வு கூட்டம் நடத்திய நிலையில், கான்ட்ராக்டரின் மிரட்டல் சத்தம், அதிர்வுகளை ஏற்படுத்தியது.பாதிப்புஅ.தி.மு.க. நிர்வாகி முருக்கோடை ராமர் மற்றும் போலீசார், அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர். குபேந்திரன் கூறுகையில், ''உதவி பொறியாளர், கோட்ட பொறியாளரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், அலைய விடுகின்றனர். என்னை போல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X