பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார நிலையத்தில் வசதியில்லை!

Added : ஜன 07, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்துள்ள ராமபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என, அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ராமபட்டினம் ஜமீன் வழங்கிய, ஐந்து ஏக்கர் நிலத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. கடந்த, 1997ல் துவக்கப்பட்ட சுகாதார நிலையத்தில், கேரள எல்லை கிராமங்கள் தவிர,

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்துள்ள ராமபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என, அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ராமபட்டினம் ஜமீன் வழங்கிய, ஐந்து ஏக்கர் நிலத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. கடந்த, 1997ல் துவக்கப்பட்ட சுகாதார நிலையத்தில், கேரள எல்லை கிராமங்கள் தவிர, சுற்றுப்பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை, பராமரிப்பு மற்றும் பிரசவம் பார்க்கப்படுகிறது.கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன், கட்டடம் பழுதடைந்து, மழை நீர் கசிவு ஏற்பட்டது. இதனால், பிரசவ அறையின் பயன்பாடு முடங்கியது. மின் இணைப்பு மற்றும் வயரிங் பழுதடைந்ததால், ஈரமான சுவர்களில் மின்சாரம் பாய்ந்து, 'ஷாக்' அடிக்கும் அவலத்துக்கு சென்றது.

இதுபற்றி, 'தினமலர்' நாளிதழில், செய்தி வெளியிடப்பட்டது. உடனடியாக மருத்துவர்களும், சம்பந்தப்பட்ட கட்டடத்தை பயன்படுத்தாமல் கைவிட்டனர். மாவட்ட அளவிலான, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, கட்டடத்தின் ஆபத்து குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து, புது கட்டடத்தின் அவசியம் குறித்து தெரிவித்தனர்.மேலும், டாக்டர் மற்றும் நர்சுகளுக்கென அமைக்கப்பட்ட தனி குடியிருப்புகளும் பழுதடைந்ததால், டாக்டர்கள் வாடகை வீட்டில் தங்கி, பணிக்கு வருகின்றனர்.

சமீபத்தில் நர்சுகளுக்காக கட்டப்பட்ட கட்டடம், தற்காலிக பிரசவ வார்டாக செயல்படுகிறது. தற்போது, மருத்துவமனைக்கு பாதுகாப்பு சுவர் அமைப்பதிலும் இழுபறி நிலையே நீடிக்கிறது. இதுகுறித்து, ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் கூறுகையில், 'மருத்துவமனையின் இன்றைய நிலை குறித்து எடுத்துரைத்து, தேவையான கட்டடம் அமைக்க வலியுறுத்தி, அரசுக்கும், சுகாதாரத்துறைக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.நோயாளிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X