அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருப்புமுனை கருவி கமல்ஹாசன் உறுதி

Added : ஜன 07, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
திருப்பத்துார்:''தமிழக அரசியலில், திருப்புமுனை ஏற்படுத்த கருவியாக இருப்பேன்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில், அவர் பிரசாரம் செய்து ‍‍பேசியதாவது:வரும் சட்டசபை தேர்தல், ஊழலுக்கும், நேர்மைக்கும் நடக்கும் போர். இதில், யார் ஜெயித்தால் என்றில்லாமல், நேர்மையின் பக்கம் நின்று, மக்கள் நீதி மையத்தை, மக்கள் ஆதரிக்க
 திருப்புமுனை கருவி கமல்ஹாசன் உறுதி

திருப்பத்துார்:''தமிழக அரசியலில், திருப்புமுனை ஏற்படுத்த கருவியாக இருப்பேன்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில், அவர் பிரசாரம் செய்து ‍‍பேசியதாவது:வரும் சட்டசபை தேர்தல், ஊழலுக்கும், நேர்மைக்கும் நடக்கும் போர். இதில், யார் ஜெயித்தால் என்றில்லாமல், நேர்மையின் பக்கம் நின்று, மக்கள் நீதி மையத்தை, மக்கள் ஆதரிக்க வேண்டும். இத்தேர்தல், அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த உள்ளது. அதற்கு கருவியாக நான் இருப்பேன். வழிநடத்த வேண்டியது மக்களாகிய நீங்கள் தான்.

மற்ற கட்சிகளை போல, நாம் வாக்குறுதி அளிக்கவில்லை. வாக்குறுதி கேட்க வந்துள்ளேன். என்னிடம் கூடும் கூட்டம், பிரியாணிக்கு வரவில்லை. நேர்மையான தமிழகம் வேண்டும் என்பதற்காக வந்துள்ளது. மக்களாகிய நீங்கள், ஏமாறாமல் இருக்க வேண்டுமானால், மக்கள் நீதி மையத்தில் சேர வேண்டும்.மக்கள் நீதி மையம், மூன்றாவது குழந்தையாக, ஊன்றும் குழந்தையாக வளர்ந்து வருகிறது.

என் மீது இருக்கும் அன்பை, கட்சியில் இணைந்து தொண்டு செய்ய வேண்டும். மக்களின் பலத்தை பயன்படுத்தி, நேர்மையான ஆட்சியை உருவாக்க வேண்டும். அதுதான் எங்கள் குறிக்கோள்.மக்கள் நீதி மையம் நேர்மையான ஆட்சியை அளிக்க, மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. தமிழக அரசியலில், திருப்புமுனை ஏற்படுத்த கருவியாக இருப்பேன். இவ்வாறு, அவர் பேசினார். இதைத் தொடர்ந்து, வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-ஜன-202112:10:43 IST Report Abuse
Malick Raja நீதி நேர்மை உண்மை . அது எங்கே என்னவிலைக்கு விற்கிறது என்பதையும் கமல் விளக்குவார் .. தேர்தலுக்கு பிறகு கருவி ..கரும்மம் .. கர்மம் . ஆகிவிடும் .. கமலின் வாழ்க்கை வரலாறு ஒரு திறந்த புத்தகம் . அதை படித்து பார்த்து தெரிந்து அறிந்து செயல்பட்டால் .. சிங்கம் .சிங்கம் ..அசிங்கமாக நிச்சயம் இருக்கும் ..
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ
07-ஜன-202114:05:02 IST Report Abuse
வல்வில் ஓரி முனை மழுங்கிவிட்டது அப்புறம் எங்கே திருப்பு முனை
Rate this:
Cancel
Venkateswaran Murugandi - Madurai(Native),இந்தியா
07-ஜன-202111:50:11 IST Report Abuse
Venkateswaran Murugandi பா ஜ க :- மத்தியில் ஊழல் குற்றச்சாட்டு இல்லாத காரணத்தால் தமிழகத்தில் அவர்கள் ஆட்சி அமைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அவர்கள் தன்னம்பிக்கை இல்லாது அதி மு க வுடன் கூட்டு வைத்தும் ரஜினிகாந்த் அவர்களையும் பயன்படுத்தியும் தங்கள் குறிக்கோளை அடையளாமென்ற நம்பிக்கையற்று desperate நிலையில் இருந்தார்களென நான் கருதுகிறேன். தர்மத்தை அடி நாதமாக்க் கொண்ட ஓர் கட்சியை இப்படிப் பார்ககும்போது அவமானமாக இருந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X