பந்தலுார் : பந்தலுாரில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
பந்தலுார் அருகே, ரிச்மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்,21. நேற்று காலை தேவகிரி என்ற இடத்தில் தனது நண்பரை இறக்கி விட்டு, இவரின் பைக்கில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, பந்தலூரில் இருந்து சேலம் சென்ற அரசு பஸ், பைக்கில் மோதியது. அதில், பலத்த காயமடைந்த இளைஞர் கோபாலகிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரின் தந்தை ஜெவரன் உடல் நலக்குறைவால் கடந்த, 10 நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பஸ் டிரைவர் செந்தில்குமார்,-42, என்பவர் மீது, தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE