ஊட்டி, : நீலகிரி, கூட்டுறவு தொழிற்சாலைகளில், கடந்தாண்டில், 6.10 கோடி கிலோ இலை கொள்முதல் எட்டியதால், விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
நீலகிரியில், 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றன. கடந்தாண்டு எதிர்பார்த்த அளவு மழை பெய்தது. இலை வரத்து அதிகரித்தது.கடந்த சில மாதங்களாக, பசுந்தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால், உறுப்பினர்கள் இலை முழுவதையும் கூட்டுறவு தொழிற்சாலைக்கு வினியோகித்தனர்.இதில், மஞ்சூர், எடக்காடு, கைக்காட்டி இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்ளிட்டதொழிற்சாலைகள், சராசரியாக, 12 மாதங்களில், தலா, 50 லட்சம் கிலோஇலை கொள்முதல்செய்தனர்.
மற்ற தொழிற்சாலைகள், 40 லட்சம் கிலோ இலை கொள்முதல் செய்துள்ளனர். கடந்தாண்டு ஜன., மாதம் முதல், டிச., மாதம் வரை, இலை கொள்முதல், 6.10 கோடி கிலோவை எட்டியது. கடந்த ஐந்தாண்டுகளை காட்டிலும், கடந்த ஆண்டு, இலை கொள்முதல் அதிகரித்திருப்பது, சிறு விவசாயிகளுக்கு பயன் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.இதன் மூலம் ஈட்டப்பட்ட, 1.50 கோடி ரூபாய் லாப தொகையை, கணக்கிட்டு உறுப்பினர்களுக்கு வழங்கும் பணி நடந்து வருகிறது. சிறு விவசாயிகள் கூறுகையில்,'கடந்த பல ஆண்டுகளை காட்டிலும், சில மாதங்களாக கிலோவுக்கு, 20 ரூபாய் அளவுக்கு விலை கிடைத்து வருகிறது.
இலை முழுவதையும் கூட்டுறவு தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகிறோம். தரத்தையும் மேம்படுத்தி வருகிறோம்.இதனால், தேயிலைக்கு நிரந்தர விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE