சம்பவம் செய்தி

தமிழ்நாடு

66 நிறுவனங்களின் மின் இணைப்பு 'கட்'

Added : ஜன 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : பின்னல் நகரான திருப்பூரில், மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல் இயங்குவது; அனுமதி பெற்றுக்கொண்டு, விதிமுறைகளை பின்பற்றாமல், ரசாயனம் கலந்த, சுத்திகரிக்காத சாயக் கழிவுநீரை திறந்துவிட்டு, நீர் நிலைகளை பாழ்படுத்துவது போன்ற முறைகேடுகளில், சில நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இத்தகைய விதிமீறல் நிறுவனங்கள் குறித்து, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தொடர் ஆய்வு

திருப்பூர் : பின்னல் நகரான திருப்பூரில், மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல் இயங்குவது; அனுமதி பெற்றுக்கொண்டு, விதிமுறைகளை பின்பற்றாமல், ரசாயனம் கலந்த, சுத்திகரிக்காத சாயக் கழிவுநீரை திறந்துவிட்டு, நீர் நிலைகளை பாழ்படுத்துவது போன்ற முறைகேடுகளில், சில நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.

இத்தகைய விதிமீறல் நிறுவனங்கள் குறித்து, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தொடர் ஆய்வு நடத்தி, மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகள் எடுக்கின்றனர். அந்தவகையில், கடந்த 2020ம் ஆண்டு, ஜன., முதல் டிச., வரை, மாசுகட்டுப்பாடு வாரிய வடக்கு பொறியாளர் அலுவலகம் மூலம், முறைகேடுகளில் ஈடுபட்ட சாய, சலவை ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள், மொத்தம் 66 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாயக்கழிவுநீரை, செப்டிக் டேங்க் லாரிகளில் கொண்டுசென்றதாக, பத்து லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X