திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி, 21வது வார்டு நல்லாத்துப்பாளையம் பகுதியில், திருமலை நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன.
சுற்றுப்பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், ரோட்டில் சேகரமாகும் மழை நீர் ஆகியன, அங்குள்ள குட்டை வடிவிலான தாழ்வான இடத்தில் தேங்கி நிற்கிறது.அண்மையில் இந்த குட்டை, கழிவு நீரால் நிரம்பியது. மேலும் தற்போது பெய்த மழையால் மேலும் இதற்கு நீர் வரத்து அதிகரித்தது. நிரம்பி நின்ற குட்டையிலிருந்து கழிவு நீருடன் கலந்த மழை நீர் வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து, வீடுகளைச் சூழ்ந்து நிற்கிறது.அருகாமையில் உள்ள வீடுகள் சிலவற்றில் நீர்க் கசிவு ஏற்பட்டு சுவர்கள் ஈரமடைந்துள்ளன.
கழிவு நீர் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் அதிகளவில் உள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இப்பகுதியில் கழிவு நீர் தேங்கும் பிரச்னைக்கு உரிய வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE