தமிழ்நாடு

' கட்டணமும் உயர்ந்தது!

Added : ஜன 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : விறகு, பாலிபேக் விலை உயர்வு; தொழிலாளர் சம்பள உயர்வால், திருப்பூரில், ஸ்டீம் காலண்டரிங் கட்டணம், 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பூரில், பின்னலாடை துறை சார்ந்து, 150 ஸ்டீம் காலண்டரிங் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம், துணிகளில் ஏற்படும் சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. திருப்பூர் ஸ்டீம் காலண்டரிங் சங்க கூட்டம் நடந்தது. தலைவர்

திருப்பூர் : விறகு, பாலிபேக் விலை உயர்வு; தொழிலாளர் சம்பள உயர்வால், திருப்பூரில், ஸ்டீம் காலண்டரிங் கட்டணம், 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

திருப்பூரில், பின்னலாடை துறை சார்ந்து, 150 ஸ்டீம் காலண்டரிங் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம், துணிகளில் ஏற்படும் சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. திருப்பூர் ஸ்டீம் காலண்டரிங் சங்க கூட்டம் நடந்தது. தலைவர் சண்முகம், தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:திருப்பூர் ஸ்டீம் காலண்டரிங் நிறுவனங்களுக்கு, எரிபொருளான விறகு கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 3,400 ரூபாயாக இருந்த ஒரு டன் விறகு விலை, தற்போது, ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது.காலண்டரிங் செய்யப்பட்ட துணியை பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் பாலிபேக் விலை, 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப்பின், தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால், சம்பளம் உயர்த்தி வழங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. எனவே, ஸ்டீம் காலண்டரிங் கட்டணம், 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X