சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி சான்றிதழில் பணி 5 பேரை தேடும் போலீஸ்

Added : ஜன 07, 2021
Share
Advertisement
கோத்தகிரி:போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேரை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக, நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவர்களை கண்டுபிடிக்க, பொது இடங்களில் போலீசார், 'நோட்டீஸ்' ஒட்டினர்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, வெவ்வேறு அரசு பள்ளிகளில், 2009ல் ஐந்து பேர், ஆசிரியர் பணியில் சேர்ந்து, ஒன்றரை

கோத்தகிரி:போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேரை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக, நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவர்களை கண்டுபிடிக்க, பொது இடங்களில் போலீசார், 'நோட்டீஸ்' ஒட்டினர்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, வெவ்வேறு அரசு பள்ளிகளில், 2009ல் ஐந்து பேர், ஆசிரியர் பணியில் சேர்ந்து, ஒன்றரை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு, 2011ல் நடந்த நிலையில், ஜாதி சான்று, நியமன ஆணை மற்றும் முன்னாள் படைவீரர் வாரிசு சான்று, ஆகியவற்றை போலியாக பெற்று பணிக்கு சேர்ந்தது தெரிந்தது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி; கதிர்வேல்; சுப்ரமணி; சுபாஷ் சந்திரன் மற்றும் தீபா ஆகிய ஐவர் மீது, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், பலமுறை பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.டிச., 2ல், ஐந்து பேரையும், அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக தெரிவித்து, நாமக்கல் ஜே.எம். 1 நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

நாமக்கல் குற்றப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ., க்கள் சேகர் மற்றும் ரவி, சம்பந்தப்பட்டவர்களின் முகவரிக்கு சென்று விசாரித்ததில், போலி முகவரி என தெரிந்தது.கிராம நிர்வாக அலுவலர்களிடம் அதற்கான சான்றிதழ் பெற்றனர். பின், அறிவிப்பு நோட்டீசை பொது இடங்களில் ஒட்டினர். 'ஐந்து பேர் குறித்தும் தகவல் தெரிந்தால், 94981 78899 மற்றும் 90804 30081 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம்' என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X