கோவை : 'கொரோனா தடுப்பூசியை, பரிசோதனை அடிப்படையில், துாய்மை பணியாளர்களுக்கு செலுத்தக் கூடாது' என, டாக்டர் அம்பேத்கர் மாநில மாநகராட்சி மற்றும் நகராட்சி துாய்மை பணியாளர் சங்க மாநில தலைவர் துரைராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறியதாவது:துாய்மை பணியாளர்களை முன்னிறுத்தி, கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்ய, தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது, துாய்மை பணியாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தொற்று பரவிய காலத்தில், இரவு பகலாக பணிபுரிந்த அத்தொழிலாளர்களின், வாழ்க்கை தரத்தை உயர்த்த, எவ்வித வழிவகையையும் செய்யாமல், உயிரை பணயம் வைத்து, பரிசோதனை முயற்சிக்கு பயன்படுத்த முயல்வதை கண்டிக்கிறோம்.மற்ற மாநிலங்களில் அவ்வாறு அறிவிக்காதபோது, தமிழகத்தில் மட்டும் அவ்வாறு அறிவித்தது ஏன்?
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, இங்குள்ள துாய்மை பணியாளர்கள் யாரும் தாமாக முன்வர தயாராக இல்லை. இப்பிரச்னையை, தமிழக அரசும், பொது சுகாதாரத்துறையும் பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு, துரைராஜ் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE