போத்தனூர் : மாநகராட்சியின், 96வது வார்டு தாயம்மாள் லே-அவுட்டில் சுமார், 9.75 சென்ட் ரிசர்வ் சைட் உள்ளது. இங்கு அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
இந்த சைட்டின் ஒரு பகுதியில், 10 அடி அகலம், சுமார், 120 அடி நீளத்திற்கு, சிலர் ஆக்கிரமிப்பு செய்து தொழிற்கூடம், வீடுகள் கட்டியுள்ளனர்.ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, இப்பகுதி குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோர்ட்டில் வழக்கு போடப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற, உள்ளாட்சி அமைப்பிற்கு கோர்ட் உத்தரவிட்டது. இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, அங்கன்வாடிக்கு கழிப்பறை கட்ட, இங்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. நேற்று அப்பகுதியை சேர்ந்த கவிதா என்பவர், ஆக்கிரமிப்பை அகற்றி விட்டு, பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர், மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஆகியோரிடம் கூறியுள்ளார்.
பணியை தடுத்து, தர்ணாவில் ஈடுபட்டார். அப்பகுதியில் வசிப்போரும் கவிதாவுடன் தர்ணாவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உதவி பொறியாளரின் புகாரின் பேரில், போத்தனுார் போலீசார் பேச்சு நடத்தினர். இதையடுத்து, ஆக்கிரமிப்பு இடத்தை இன்று அளக்க முடிவு செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE