திருப்பூர் : கால்நடைத்துறை அலுவலர் குழு, கோழிப்பண்ணைகளை தினமும் கண்காணித்து வர வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பறவை காய்ச்சல் தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்து பேசியதாவது:மாவட்டத்தில், பறவை காய்ச்சல் தடுப்பு பணிக்காக, 39 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை, கால்நடைத்துறை அலுவலர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும்.மனிதர்களுக்கு, பறவை காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், சுகாதாரத்துறை அதிகாரிகள், உடனடியாக கால்நடைத்துறை இணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும், சுகாதாரமான முறையில் கோழி இறைச்சி அப்புறப்படுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும்.இறைச்சிக்கோழிகள், அசாதாரண சூழலில் இறந்தால், கால்நடைத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வனப்பகுதியில், வனப்பறவைகள் அசாதாரண சூழலில் இறந்தாலும், அருகே வசிப்பவர்கள், வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE