பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளை திறக்கலாமா

Added : ஜன 07, 2021
Share
Advertisement
கோவை : கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம், முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. தனியார் பள்ளி ஆசிரியர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், பெற்றோரிடம் கருத்து கேட்டு முடிவு எடுப்பதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பு பற்றி, கோவை மக்கள் என்ன சொல்கின்றனர்?பள்ளிகளை திறக்கலாம்! ஆன்லைன் வகுப்பு என, பெற்றோர்களிடம் கூறி விட்டு, மாணவர்கள் வீடியோ

கோவை : கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம், முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. தனியார் பள்ளி ஆசிரியர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெற்றோரிடம் கருத்து கேட்டு முடிவு எடுப்பதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பு பற்றி, கோவை மக்கள் என்ன சொல்கின்றனர்?பள்ளிகளை திறக்கலாம்! ஆன்லைன் வகுப்பு என, பெற்றோர்களிடம் கூறி விட்டு, மாணவர்கள் வீடியோ கேம் விளையாடி வருகின்றனர். யாரும் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. இதனால், பல பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆகையால்,சமூக இடைவெளியுடன் வகுப்புகளை நடத்தலாம். பள்ளிகள் திறப்பது தான்நல்லது.- திவ்யா பிரியா, தனியார் ஊழியர், சரவணம்பட்டி. இப்போதைக்கு வேண்டாம்பள்ளிகளை இப்போதைக்கு திறக்க வேண்டாம். வீட்டில் இருந்தால் கட்டுப்பாடாக வைத்து கொள்ள முடியும்.

பள்ளிக்கு சென்றால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறிதான். ஒரு ஆசிரியரால், 40க்கும் மேற்பட்ட மாணவர்களை கட்டுப்படுத்துவது சிரமம்.ஆகவே, இன்னும் சிறிது காலம் பொறுப்பது நல்லது.- லதா, இல்லத்தரசி, வடவள்ளி புதுார்.தடுப்பு மருந்து வரட்டும்!பள்ளிகள் திறக்கப்பட்டால், மாணவர்களுக்கு நோய் தொற்றுபரவ அதிக வாய்ப்பு உள்ளது. தடுப்பு மருந்து கிடைக்கும் வரை, பள்ளிகளை திறப்பதுசரியான முடிவு இல்லை. பிற நாடுகளில் மீண்டும் மூடியுள்ளதை பார்க்க வேண்டும். இது குறித்து, தமிழக அரசு நன்கு ஆலோசித்து சரியான முடிவு எடுக்க வேண்டும்.- சதீஷ், தனியார் ஊழியர், டவுன்ஹால்.

பள்ளிகளை திறப்பது நல்லதுசமூக இடைவெளியுடன் பள்ளிகளை திறந்தால் தான் நல்லது. பத்து மாதங்களாக படிப்பில் முழு கவனம் செலுத்தாமல், விளையாட்டுத்தனமாக உள்ளனர். யாரும் புத்தகம் எடுத்து படிப்பதில்லை. பள்ளிகள் திறந்தால் நல்லது தான்.பாதுகாப்பாக இருந்தால் கொரோனா தொற்றை தடுத்து விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.- மயூரா, இல்லத்தரசி, சாய்பாபா காலனிஇரண்டாவது அலைஇங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் அலை உருவெடுத்துள்ளது.

அது எந்த அளவுக்கு பாதிக்கும் என சொல்ல முடியாது. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டால் மேலும், நோய் பரவ அதிகவாய்ப்புள்ளது.- சரவணக்குமார், சுகாதாரத்துறை, கோவை.வருடம் போனால் பரவாயில்லைஒரு வகுப்பில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும் பட்சத்தில், சமூக இடைவெளி கடைபிடிப்பது சிரமம். பள்ளிக்கு வந்தால் ஆசிரியர்கள் முழுமையாக படங்களை கற்றுத்தர முடியாது. ஆகையால், இந்த வருடம் முழுமையாக வீண் ஆனாலும் பரவாயில்லை. பள்ளிகளை திறக்க வேண்டாம்.- இக்பால், ஆட்டோ ஓட்டுநர், சுந்தராபுரம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X