நோயற்ற வாழ்வுக்கு சுதர்சன ேஹாமம்கோவை: உலக நன்மை கருதியும், கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுதலையாகவும், மக்கள் நோய்நொடியின்றி செழிப்பான வாழ்வு வாழவும், சலிவன் வீதியிலுள்ள வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில், இன்று காலை 11:00 மணியளவில் சுதர்சன ஹோமம் நடக்கிறது. இதில் வேதவிற்பன்னர்கள், பண்டிதர்கள், பாகவதோத்தமர்கள் பங்கேற்கின்றனர். இதில் பக்தர்கள் சமூக இடைவெளியோடு, முகக்கவசம் அணிந்து பங்கேற்கலாம்.
நர்ஸ்களுக்கு பயிற்சி!கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள, 83 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 500 நர்ஸ்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, மாவட்ட சுகாதார துறை அலுவலகத்தில், மகப்பேறு காலத்தில் சிகிச்சை அளிப்பது குறித்து நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். அதில், கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.
'நம்ம ஊரு பொங்கல்'தொண்டாமுத்துார்: தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில், பா.ஜ., சார்பில், வரும், 10ம் தேதி, 'நம்ம ஊரு பொங்கல்' கொண்டாடப் படுகிறது. இது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு, பா.ஜ., மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். கிராமிய கலைநிகழ்ச்சிகள், கோல போட்டிகளுடன், 108 பொங்கல் வைக்க முடிவு செய்யப்பட்டது.நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!கோவை: கோவையில் கொரோனா தொற்றின் தாக்கம், மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, பழையபடி அதிகரித்து வருகிறது.
கொரோனா வார்டில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து விட்டதால், அங்கு பணியாற்றிய டாக்டர்கள், பொது மருத்துவ சிகிச்சைக்கு, பணியமர்த்தப்பட்டுள்ளதாக, டீன் காளிதாஸ் தெரிவித்தார்.
'மினி கிளினிக்'பயன்படுத்துங்க!கோவை: அம்மா 'மினி கிளினிக்'குளில், சர்க்கரை அளவு, எச்.பி., அளவு, சிறுநீர் சர்க்கரை, சளி பரிசோதனை, சிறுநீர் மூலம் கர்ப்பம் உறுதிசெய்தல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொற்றா நோய், புற நோயாளிகள் தொடர்பான சிகிச்சைகள், சிறு காயம், காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி, பெண்கள், குழந்தைகளுக்கான பொது சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மருந்து, மாத்திரைகளும் வழங்கப்படுவதால் மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அனைவருக்கும் நேரடி கல்லுாரி படிப்புகோவை: கொரோனாவால் மூடப்பட்டிருந்த கல்லுாரிகள், கடந்தாண்டு டிச., 2ம் தேதி முதல் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலை மற்றும் இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் மட்டும், கல்லுாரிகளுக்கு சென்று வருகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் கல்லுாரிகளில் நேரடி வகுப்புகளை துவக்கலாமா என, கல்லுாரி கல்வி இயக்ககத்தின், மண்டல அதிகாரிகள் தரப்பில் கருத்துக்கள் பெறப்பட்டு, உயர்கல்வி துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு!கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பல்வேறு துறை தலைவர்கள், மருத்துவ பணியாளர்கள், டிரைவர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் நேற்று டீன் காளிதாஸை சந்தித்து, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். கொரோனா காலத்தில் முன் களப்பணியாளர்களாக இருந்து, பல உயிர்களை காப்பாற்ற உறுதுணையாக இருந்தவர்களுக்கு, டீன் காளிதாஸ் பாராட்டுகளை தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE