பொது செய்தி

தமிழ்நாடு

அனைவருக்கும் தடுப்பூசி: உலகளாவிய சவால்

Updated : ஜன 07, 2021 | Added : ஜன 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை :'உலகளவில், கொரோனா தடுப்பூசியை, அனைத்து தரப்பு மக்களுக்கும் விரைவாக வினியோகிப்பது, மிகப்பெரிய சவால்' என, உலக சுகாதார நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.இந்தியாவில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகளுக்கு, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தை, பெரிய அளவில் செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அனைவருக்கும் தடுப்பூசி: உலகளாவிய சவால்


சென்னை :'உலகளவில், கொரோனா தடுப்பூசியை, அனைத்து தரப்பு மக்களுக்கும் விரைவாக வினியோகிப்பது, மிகப்பெரிய சவால்' என, உலக சுகாதார நிறுவனம் கருத்து
தெரிவித்துள்ளது.

இந்தியாவில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகளுக்கு, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தை, பெரிய அளவில் செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, நாடு முழுதும், கொரோனா தடுப்பு பணியில் உள்ள, முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
தொடர்ந்து, நாள்பட்ட நோயாளிகள், முதியவர்கள் என, அனைத்து தரப்பினருக்கும் செலுத்தப்பட உள்ளது.


latest tamil news
இது குறித்து, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி, டாக்டர் சவுமியா சுவாமிநாதன், ஆலோசகர் டாக்டர் ஹம்சத்வனி குகானந்தம் ஆகியோர் கூறியதாவது:பெரும்பாலான நாடுகளில், வைரஸ் பரவி உள்ளது. பல நாடுகளில், பொது சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன், தொற்று பரவ துவங்கியுள்ளது.


அதிகரிக்கும்உலகளாவிய சுகாதார பாதுகாப்பு குறியீட்டின்படி, எந்தவொரு நாடும், தொற்று நோயை கையாள தயாராக இல்லை. பெரும்பாலான நாடுகளில், தொற்று நோய்க்கான அடிப்படை மருத்துவ கட்டமைப்பு இல்லை.கொரோனாவால், பொருளாதார மற்றும் பாலின ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன. பல நாடுகளில், சிறுபான்மையினர், ஏழைகள், படிப்பறிவு குறைந்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது.

மேலும், 10 கோடி மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள், சமூகத்தோடு ஒன்றியிருப்பதால், அவை கொரோனா பரவலுக்கான அடித்தளமாக உள்ளன. பள்ளிகள், 'ஆன்லைன்' முறையில் இயங்கினாலும், உலகில் மூன்றில், ஒரு பங்கு குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், உணவு ரீதியான வன்முறைக்கு, குழந்தைகள் துாண்டப்படுவதுடன், குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை, அனைத்து நாடுகளும் ஏற்படுத்த வேண்டும்.

உலகில், மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை, இந்தியா துவங்குகிறது. இதில், அனைத்து தரப்பு மக்களும், குறிப்பிட்ட கால அளவிற்குள், நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதற்கான சவாலையும், இந்தியா எதிர்நோக்கியுள்ளது. இது, உலகளாவிய சவாலாக பார்க்கப்
படுகிறது.கொரோனா தடுப்பூசியை மேம்படுத்துதல், உற்பத்தி மற்றும் அனைவருக்கும் கிடைக்க செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், உலகளாவிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு, தொற்று நோய்களுக்கான முன்தயாரிப்பு கூட்டமைப்பு, தடுப்பூசி கூட்டணி அறக்கட்டளை ஆகியவை
ஈடுபட்டுள்ளன.மேலும், வல்லரசு முதல், வளர்ந்து வரும் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடுகள் வரை, அனைவருக்கும் தடுப்பூசி பயன்கள் கிடைக்க வேண்டும்.

இதில், மக்கள் தொகை மற்றும் பாதிப்பு அளவீடு போன்றவை காரணமாக, அதிக தடுப்பூசிகள், பல நாடுகளுக்கு கிடைக்கும்.தடுப்பூசியால் சமூக பரவல் கட்டுப்படுத்தப்படுவதுடன், மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
ஆனாலும், முக கவசங்கள், சமூக இடைவெளி போன்றவற்றை கடைப்பிடிப்பது அவசியம்.


முடிவுக்கு வரும்தொற்று நோய், பலவற்றை நமக்கு கற்று தருகிறது. எனவே, வருங்காலங்களில் நெருக்கடிகளை கையாளக்கூடிய, மீண்டு வரக்கூடிய, சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் அவசியம். இந்த தொற்று நோய், ஒரு நாள் முடிவுக்கு வரும்.
ஆனால், அடுத்த முறை, நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த, உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அறிவியல் மற்றும் ஒற்றுமை வாயிலாக, தீர்வை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.மேற்கூறப்பட்ட செய்தி, 'மலையாள மனோரமா' வின், 2021ம் ஆண்டு புத்தகத்திலும் ெவளியாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
07-ஜன-202110:38:51 IST Report Abuse
S. Narayanan India will carry out any challenge and achieve it fast.
Rate this:
Cancel
07-ஜன-202108:29:27 IST Report Abuse
ஆரூர் ரங் அரபு நாடுகள் எவ்விலை கொடுத்தேனும் வாங்கி அரபு மக்களுக்கு மட்டும் உடனடியாகப் போடத்துடிக்கின்றன . அங்கிருக்கும் அன்னிய தொழிலாளர் கதிதான் 😢 பாவம்
Rate this:
Cancel
ANTONYRAJ - MADURAI,இந்தியா
07-ஜன-202106:32:21 IST Report Abuse
ANTONYRAJ இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி மத்திய அரசு அறிவிப்பு: இது இந்தியாவின் கொரோனா கால நடவடிக்கையில் மிகபெரிய வெற்றியாகும்.ஆம் ஒவ்வொரு நாடும் அமெரிக்க பைசர் நிறுவனம், சீன நிறுவனம், ரஷ்யாவின் ஸ்புட்னிக் என வெளிநாட்டு மருந்துக்குகளுக்கு கையேந்தி நிற்கின்றன.அதுவும் பல்லாயிரம் கோடி பணத்துடன் நிற்கின்றன‌. ஆனால் நம் அருமை இந்தியா அதில் வெற்றிபெற்று வெளிநாட்டுக்கு பணத்தை வாரியிறைக்காமல் தன்னை தற்காத்து கொண்டது. இந்திய வரலாற்றில் இது நிச்சயம் புதிது. மிகவும் சிக்கலான நேரத்தில் நம் தேசம் சரியான வழியினை கண்டிருக்கின்றது. இதற்கு காரணமான இந்திய விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார். ஆம் உலக விஞ்ஞான கழகமும் (WHO) இந்திய மருந்தினை தரமானது என ஒப்புகொண்டிருக்கின்றது.இது தடுப்பு மருந்து மட்டுமே, அதாவது வருமுன் காக்கும் வகை மருந்து தான், அது மட்டும்தான் இப்பொழுது உலகில் சாத்தியம். மிக பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இது உடனே எல்லோருக்கும் வழங்கபடுவது சாத்தியமில்லை. எனினும் சில மாதங்களில் எல்லோருக்கும் வழங்கபடும். முதல்கட்டமாக மருத்துவர்கள் உள்ளிட்ட கள பணியாளர்கள்,அரசு ஊழியர்களுக்கு இது வழங்கபடும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. உண்மையில் இந்தியாவின் சீரம் நிறுவனமும்,பாரத் பயோடெக் நிறுவனமும் 2020 ஆண்டிலேயே இதற்கான ஆராய்ச்சியில் இறங்கி விட்டன. அதற்கு உத்தரவிட்டது இந்திய அரசு என்பது குறிப்பிடத்க்கது.உலக அளவில் மிகபெரிய சாதனைகளில் ஒன்றினை செய்து, வல்லரசுகளுக்கு இணையாக தன்னை நிறுத்தியிருக்கின்றது இந்தியா. உலக அரங்கில் வலுவான நாடாக இந்தியா தலைநிமிர்ந்து நிற்கின்றது என்றால் அது மிகையில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X