தேனி:பணி செய்ததற்கு 7 மாதங்களாக ரூ.8 லட்சம் வழங்காததால் தற்கொலை செய்வேன் என கான்ட்ராக்டர் குபேந்திரன் தேனி ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் மிரட்டல் விடுத்தார்.
ஆண்டிபட்டி ஒன்றியம் கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை திட்டத்தில் கான்ட்ராக்டர் குபேந்திரன் ரூ.8 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி செய்தார். பணி முடித்து 7 மாதங்களாகியும் அதற்கான தொகை வழங்கவில்லை. தொடர்நது அலைந்தும் பணம் கிடைக்கவில்லை.
தேனி ஊரக வளர்ச்சி துறைக்கு சென்று பணிக்கான தொகையை வழங்க கோரினார். அலுவலர்களுக்கும் அவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. பில் பாஸ் செய்து வழங்காவிட்டால் மாடியில் இருந்து குதித்து சாவேன் என சத்தம் போட்டார்.தரைதளத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆய்வு கூட்டம் நடத்திய நிலையில் கான்ட்ராக்டரின் மிரட்டல் சத்தம் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க. நிர்வாகி முருக்கோடை ராமர், போலீசார் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர். குபேந்திரன் கூறுகையில், ''உதவி பொறியாளர், கோட்ட பொறியாளரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் அலைய வைக்கின்றனர். என்னை போல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE