கூடலுார்:தேனி மாவட்டம் கூடலுாரில் மக்கள் மன்றம் சார்பில் அனைத்து சமுதாய கூட்டமைப்பினருடன் நடந்த கூட்டத்தில் லோயர்கேம்ப்-மதுரை குடிநீர் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் புதுராஜா, தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கவுரவத்தலைவர் தங்கராஜ், செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் செல்வம், மக்கள் தொடர்பாளர் ரவிக்குமார் முன்னிலையில் கூட்டம் நடந்தது.
தீர்மானங்கள்
ரூ.1295 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்ட லோயர்கேம்ப் --மதுரை குடிநீர் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்து வைகை அணையை துார்வாரி அங்கிருந்து குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். லோயர்கேம்பில் இருந்து நேரடியாக குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு சென்றால் தேனி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.
எனவே திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜன.25ல் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஊர்வலம் நடத்துவது. தினமும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் உண்ணாவிரதம் இருப்பது. திட்டம் குறித்து சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து மேல் நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE