இ.எஸ்.ஐ., அட்டைதாரர்களுக்கு இனி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்.ஐ., அட்டைதாரர்களுக்கு இனி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை!

Added : ஜன 07, 2021
Share
கோவை : கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், இ.எஸ்.ஐ.,அட்டைதாரர்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, டீன் நிர்மலா தெரிவித்தார். கோவையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்திருந்த சமயத்தில், நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை கடந்தாண்டு மார்ச் மாதம் பிரத்யேக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.இதையடுத்து, இ.எஸ்.ஐ.,

கோவை : கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், இ.எஸ்.ஐ.,அட்டைதாரர்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, டீன் நிர்மலா தெரிவித்தார்.

கோவையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்திருந்த சமயத்தில், நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை கடந்தாண்டு மார்ச் மாதம் பிரத்யேக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.இதையடுத்து, இ.எஸ்.ஐ., அட்டைதாரர்கள் அருகில் உள்ள இ.எஸ்.ஐ.,மருந்தகம் அல்லது கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டதையடுத்து, அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், இ.எஸ்.ஐ., அட்டைதாரர்களுக்கு, இ.எஸ்.ஐ.,மருத்துவமனையிலேயே மீண்டும் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இ.எஸ்.ஐ.,மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''இம்மருத்துவமனையில் தற்சமயம், 112 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். 500 படுக்கைகள் காலியாக உள்ளன. எனவே, இ.எஸ்.ஐ.,அட்டைதாரர்களுக்கு மீண்டும் இங்கேயே சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கென தனி கட்டடத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடிய விரைவில் சிகிச்சை அளிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X