சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.8.63 கோடிக்கு வீடுகள் விற்றவர்கள் மீது வழக்கு

Added : ஜன 07, 2021
Share
Advertisement
கோவை : போலி ஆவணம் தயாரித்து, 8.63 கோடி ரூபாய்க்கு வீடுகள் விற்ற கட்டுமான நிறுவன இயக்குனர்களை, போலீசார் தேடி வருகின்றனர். சூலுார் அருகேயுள்ள கண்ணம்பாளையத்தில், சந்திரசேகர்,57, என்பவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் வீடு கட்டி விற்பதற்காக, பெய்ரி லேண்ட் பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்தினர். சந்திரசேகருடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.அதன்படி,

கோவை : போலி ஆவணம் தயாரித்து, 8.63 கோடி ரூபாய்க்கு வீடுகள் விற்ற கட்டுமான நிறுவன இயக்குனர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

சூலுார் அருகேயுள்ள கண்ணம்பாளையத்தில், சந்திரசேகர்,57, என்பவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் வீடு கட்டி விற்பதற்காக, பெய்ரி லேண்ட் பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்தினர். சந்திரசேகருடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.அதன்படி, நிலத்தை மனைகளாக பிரித்து, 30 வீடுகள் கட்டினர். வீடு கட்டி முடிந்த பிறகு ஒப்பந்தப்படி, சந்திரசேகருக்கு பணம் கொடுக்கவில்லை. அவருக்கு தெரியாமல், போலி ஆவணம் தயாரித்து,போலி கையெழுத்திட்டு, 8.63 கோடி ரூபாய்க்கு வீடுகளை விற்பனை செய்தனர்.

பாதிக்கப்பட்ட சந்திரசேகர், பெய்ரி கட்டுமான நிறுவன இயக்குனர்கள் ராஜசேகர், சரவணன், விஜயகுமார் ஆகியோர் மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X