சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரிட்டனில் மீண்டும் 'லாக்டவுன்' திருப்பூர் ஏற்றுமதியாளர் கவலை

Added : ஜன 07, 2021
Share
Advertisement
திருப்பூர் : மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், பிரிட்டனுடன் வர்த்தக தொடர்பு வைத்துள்ள, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.உருமாறிய கொரோனா பரவலால், பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது; மக்கள் வெளியே வருவதற்கும், வர்த்தக நிறுவனங்கள் இயங்கவும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரதான சந்தைகளில் ஒன்றான பிரிட்டன்,

திருப்பூர் : மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், பிரிட்டனுடன் வர்த்தக தொடர்பு வைத்துள்ள, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.உருமாறிய கொரோனா பரவலால், பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது;

மக்கள் வெளியே வருவதற்கும், வர்த்தக நிறுவனங்கள் இயங்கவும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரதான சந்தைகளில் ஒன்றான பிரிட்டன், மீண்டும் முடங்குவது, திருப்பூர் ஏற்றுமதி ஆடை உற்பத்தி துறையினரை கவலை அடைய செய்துள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:பிரிட்டனில், மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால், அந்நாட்டு வர்த்தகர்கள், உற்பத்தி செய்த ஆடைகளை தாமதமாக அனுப்பி வைக்க கோருகின்றனர். ஊரடங்கு, வர்த்தக பாதிப்புகளை காரணம் காட்டி, ஏற்கனவே அனுப்பிய ஆடைக்கான தொகையை வழங்கவும், காலதாமதம் செய்யும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால், நிறுவனங்களின் வழக்கமான பண புழக்கம் பாதிக்கப்படும். குறிப்பாக, பிரிட்டனுடன் வர்த்தக தொடர்பு வைத்துள்ள நிறுவனங்கள், சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது, தற்காலிகமான பிரச்னைதான்; அந்நாட்டில், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.விரைவில் இயல்பு நிலை திரும்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், பயப்பட தேவையில்லை. வர்த்தகர்களை தொடர்பு கொண்டு, நிலவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X