பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா: விருதுநகர் டிஸ்சார்ஜ் 16,088

Added : ஜன 07, 2021
Share
Advertisement
மதுரை:விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா குணமாகி 16,088 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.மதுரைமதுரை மாவட்டத்தில் புதிதாக 16 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 20,028 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 20 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 20,645 ஆகும். இதுவரை 455 பேர் இறந்துள்ளனர். தற்போது 162 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல்லில் நேற்று 23 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.

மதுரை:விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா குணமாகி 16,088 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் புதிதாக 16 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 20,028 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 20 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 20,645 ஆகும். இதுவரை 455 பேர் இறந்துள்ளனர். தற்போது 162 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் நேற்று 23 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 10,709 ஆக உயர்ந்தது. நேற்று 7 பேர் உட்பட இதுவரை 11,019 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 113 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் நேற்று 8 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை 16,668 பேர் குணம் அடைந்து உள்ளனர். புதிதாக 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16,942 ஆக உயர்ந்தது. மொத்த பலி 324.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 6 பேர் மீண்டனர். 4 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 29 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 6346 பேருக்கு கொரோனா ஏற்பட்டதில் 6183 பேர் குணமடைந்துள்ளனர். 134 பேர் பலியாகியுள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 11 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். புதிதாக 3 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 6560 பேர் பாதித்ததில் 6390 பேர் குணமடைந்தனர். தற்போது 44 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 126 பேர் பலியாகினர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 11 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 6 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை கொரோனா கண்டறியப்பட்ட 16,415 பேரில் 16,088 பேர் குணமடைந்தனர். 98 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 11 பேர் உள்பட மொத்தம் 15,035 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக 18 பேர் உட்பட இதுவரை 15,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 113 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 212 பேர் பலியாகியுள்ளனர்.

தென்காசி

தென்காசியில் நேற்று 13 பேர் உட்பட இதுவரை 8099 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 3 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 8303 ஆனது. தற்போது 46 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பலி 158.

துாத்துக்குடி

துாத்துக்குடியில் நேற்று 9 பேர் உட்பட மொத்தம் 15,899 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 10 பேர் உட்பட இதுவரை 16,132 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தற்போது 92 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 141 பேர் இறந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X