காங்., பெண் தலைவரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர்

Added : ஜன 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
டேராடூன்:உத்தரகண்ட் மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் காங். பெண் பிரமுகருமான இந்திரா ஹிருதயேஷ் குறித்து கட்சியின் மாநிலத் தலைவர் கூறிய கருத்துக்கு பா.ஜ.வைச் சேர்ந்த உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மன்னிப்பு கேட்டுள்ளார்.உத்தரகண்டில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான பா.ஜ. அரசு அமைந்துள்ளது. பா.ஜ. மாநிலத் தலைவரான பன்சிதர் பகத் சமீபத்தில்

டேராடூன்:உத்தரகண்ட் மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் காங். பெண் பிரமுகருமான இந்திரா ஹிருதயேஷ் குறித்து கட்சியின் மாநிலத் தலைவர் கூறிய கருத்துக்கு பா.ஜ.வைச் சேர்ந்த உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மன்னிப்பு கேட்டுள்ளார்.

உத்தரகண்டில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான பா.ஜ. அரசு அமைந்துள்ளது. பா.ஜ. மாநிலத் தலைவரான பன்சிதர் பகத் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான காங். பெண் பிரமுகர் இந்திரா ஹிருதயேஷ் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார்.இதற்கு இந்திரா கடும் கண்டனம் தெரிவித்தார்.

பகத் மீது நடவடிக்கை எடுக்கும்படி பா.ஜ. தலைவர் நட்டா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை அவர் கேட்டுக் கொண்டார்.இந்த நிலையில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் சமூக வலை தளத்தில்வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். பெண்களை நாங்கள் மிகவும் உயர்வாக கருதுபவர்கள். தனிப்பட்ட முறையில் உங்களுக்கும் இதனால் வேறு யாரும் பாதிக்கப்பட்டு இருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். உங்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்துள்ள பகத் தன் கருத்தை திரும்பப் பெறுவதாக கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
07-ஜன-202110:21:42 IST Report Abuse
Loganathan Kuttuva தவறுக்கு மன்னிப்புக்கேட்கும் தலைவர்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X