லண்டன்:பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்களின் சமூகவலைதள கணக்குகளை முடக்கி, அவர்களை மிரட்டி, பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு, பிரிட்டன் நீதிமன்றம், 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
ஐரோப்பிய நாடான, பிரிட்டனின், தென் கிழக்கு பகுதியில் உள்ள, எஸ்சக்ஸ் என்ற இடத்தை சேர்ந்தவர், ஆகாஷ் சோந்தி, 27.இந்தியரான இவர் மீது, நுாற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். இது குறித்து, அந்நாட்டின், 'சைபர் கிரைம்' போலீசார் விசாரணை நடத்தினர்.அதில், 2016, டிசம்பர் முதல், 2020, மார்ச் வரை, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பெண்களின் சமூகவலைதள கணக்குகளை, ஆகாஷ் சோந்திமுடக்கியது தெரியவந்தது.
அதில் உள்ள அந்தரங்க புகைப்படங்களை காட்டி, சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டியது தெரியவந்தது.பெண்களின் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறும், மீறினால், அவர்களது புகைப்படங்களை, உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பிவிடுவேன் என்றும், தொடர்ந்து மிரட்டியுள்ளார்.இதன் காரணமாக, பல பெண்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். பலர், தற்கொலைக்கு முயன்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச்சில், ஆகாஷ் சோந்தியை போலீசார் கைது செய்தனர். அவரது குற்றம், பிரிட்டன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு, 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE