கோவை : அரசுப் பணிதேர்வில் வெற்றி பெறுவதற்கு, இணையதளம் வாயிலாக இலவச சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், உதவி கணக்கு அலுவலர் உட்பட, 32 விதபணிகளுக்கு தேர்வு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க வரும், 31ம் தேதி கடைசி. விபரங்கள், https://ssc.nic.in என்ற இணையதளத்தில் உள்ளது. தேர்வர்களுக்கு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில்,'ஜூம்' செயலியில், இலவச சிறப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில், பாடக்குறிப்புகள், குழு விவாதம் உள்ளிட்டவை இணையதளம் வாயிலாக பகிரப்பட்டு, வாரந்தோறும் மாதிரி தேர்வும் நடத்தப்படுகிறது.
விபரங்களுக்கு, 98423 18081 என்ற எண்ணில் 'வாட்ஸ் அப்' மூலமும், tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்திலும், தகவல் திரட்டலாம். இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயன்பெறலாம் என, மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE