பொது செய்தி

தமிழ்நாடு

'வில்லேஜ் போலீஸ்' .. கிராம உதவியாளரின் சொல்ல மறந்த கதை

Added : ஜன 07, 2021
Share
Advertisement
அவிநாசி : 'வில்லேஜ் போலீஸ்' அந்தஸ்து பெற்ற கிராம உதவியாளர்கள், தங்கள் கடமையை மறந்ததால் தான், போலீசுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டிருக்கிறது. சமீபநாட்களாக, நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமங்களிலும், திருட்டு, வழிப்பறி, பாலியல் குற்றம் என, பல்வேறு குற்ற செயல்கள் நடக்கின்றன. வெளி மாவட்ட மற்றும் பிற மாநில தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் குடியேற துவங்கியிருப்பதும்,

அவிநாசி : 'வில்லேஜ் போலீஸ்' அந்தஸ்து பெற்ற கிராம உதவியாளர்கள், தங்கள் கடமையை மறந்ததால் தான், போலீசுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டிருக்கிறது.

சமீபநாட்களாக, நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமங்களிலும், திருட்டு, வழிப்பறி, பாலியல் குற்றம் என, பல்வேறு குற்ற செயல்கள் நடக்கின்றன. வெளி மாவட்ட மற்றும் பிற மாநில தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் குடியேற துவங்கியிருப்பதும், இதற்கு ஒரு முக்கிய காரணம்.இதனால், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அதிகளவில் புகார் வழங்கப்படுகிறது. கிராமங்களில், பொதுமக்களுக்கும், போலீசாருக்கு நல்லிணக்கம் ஏற்படுத்தி, குற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, 'கிராமப்புற காவலர் திட்டம்' என்ற ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

'பொதுமக்கள் தங்கள் ஊராட்சி சார்ந்த பிரச்னை உட்பட அனைத்து விஷயங்களையும் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அந்தந்த கிராமங்களில் பணிபுரியும் கிராம உதவியாளருக்கு, 'வில்லேஜ் போலீஸ்' என்ற அந்தஸ்து, அரசின் சார்பில் முந்தைய ஆண்டுகளில் இருந்தே வழங்கப்பட்டிருக்கிறது; அதற்கான பட்டயம் கூட உள்ளது.கிராம உதவியாளர்களுக்கு, வி.ஏ.ஓ.,க்களுக்கு வருவாய் துறை சார்ந்த பணி மட்டுமன்றி, பேரிடர் சார்ந்த விஷயங்களை கண்காணிப்பது, கொலை, தற்கொலை, அசாதாரண மரணம், தொற்று நோய் மற்றும் கால்நடைகளை தாக்கும் நோய் குறித்து, வி.ஏ.ஓ.,வுக்கு அறிக்கை அனுப்புவது.

அரசு சொத்துகளை பாதுகாப்பது, குற்றம் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழலை முன்கூட்டியே கணித்து, போலீசாரின் கவனத்துக்கு கொண்டு செல்வது என, பல பணிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பணிகளை, கிராம உதவியாளர்கள், சரிவர செய்யும் பட்சத்தில், போலீசாருக்கான பணிச்சுமை குறையும்; கிராமங்களில் அமைதி தழுவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X