கோவை : கவுண்டம்பாளையம் ஸ்ரீ சபரீச சேவா சங்கத்தின், 8வது ஆண்டு தர்மசாஸ்தா மஹோற்சவ விழா, பி.எம்.என்.திருமண மண்டபத்தில் துவங்கியது.யாகசாலையில் சாஸ்தா மூல மந்திர ஹோமம், மகாருத்ர ஜபம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூர்ணாஹுதி, மகாதீபாராதனை நடந்தது.பின்னர், ஐயப்பசுவாமிக்கு லட்சார்ச்சனையும், அஷ்டாபிஷேகமும் செய்து, கலசஅபிஷேகம் மகாபூர்ணாஹுதி, மகாதீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் ஐயப்பசுவாமிக்கு புஷ்பாஞ்சலி, கனகாபிஷேகம் செய்து மகாதீபாராதனையோடு விழா நிறைவு பெற்றது. கொரோனா விதிமுறைகளால் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே, பூஜையில் பங்கேற்க சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE